மூதாட்டி வீட்டில் 21 சவரன் நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு

Added : செப் 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சாரம் பகுதியில் தனியாக வசிக்கும் மூதாட்டி வீட்டில் புகுந்து 21 சவரன் நகை, சொத்து பத்திரங்கள் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி சாரம், கண்ணன் நகர், கோவிந்தப்பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் ரங்கராஜலு. இவரது மனைவி லலிதா, 78.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரங்கராஜலு இறந்தார். இவரது மகன் பாலமுருகன் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டில் இருந்து புதுச்சேரி

புதுச்சேரி-சாரம் பகுதியில் தனியாக வசிக்கும் மூதாட்டி வீட்டில் புகுந்து 21 சவரன் நகை, சொத்து பத்திரங்கள் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி சாரம், கண்ணன் நகர், கோவிந்தப்பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் ரங்கராஜலு. இவரது மனைவி லலிதா, 78.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரங்கராஜலு இறந்தார். இவரது மகன் பாலமுருகன் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டில் இருந்து புதுச்சேரி வந்து இறுதி சடங்கில் பங்கேற்றனர்.அப்போது பாலமுருகன் மனைவி கோகிலாஸ்ரீ, அவரது தந்தை ராஜேந்திரன் ஆகியோர், வீட்டின் சொத்து பத்திரங்களை கேட்டுள்ளனர். இதனால் தகராறு ஏற்பட்டு, பாலமுருகனும், கோகிலாஸ்ரீயும் பிரிந்து வசித்து வருகின்றனர்.கடந்த ஏப்., 17ம் தேதி, லலிதா வீட்டிற்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், மாடி அறைக்கு சென்று பீரோவில் இருந்த பொருட்கள் மற்றும் சி.சி.டி.வி. ஹார்ட் டிஸ்க்கை திருடிச் சென்றனர்.பின்னர் லலிதா பீரோவை சோதனை செய்தபோது, 21 சவரன் நகைகள், வீட்டின் சொத்து பத்திரங்களை திருடி சென்றது தெரியவந்தது.மருமகள் கோகிலா ஸ்ரீ, அவரது தந்தை ராஜேந்திரன் துாண்டுதலின்பேரில், நகை, பத்திரங்களை திருடிச் சென்றுள்ளதாக, உருளையன்பேட்டை போலீசில் லலிதா புகார் அளித்தார்.அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X