பொது செய்தி

தமிழ்நாடு

அக்., 2ல் போராட்டம்; பழங்குடியினர் திட்டவட்டம்

Added : செப் 23, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை, கல்லார்குடி செட்டில்மென்ட்டில், காடர் இனத்தை சேர்ந்த பழங்குடியினர், 23 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த செட்டில்மென்ட்டில், கடந்த, 2019ம் ஆண்டு பெய்த கனமழையில் வீடுகள் அனைத்தும் மண்ணில் புதைந்தன.இதனால் பழங்குடியின மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், தற்காலிகமாக தாய்முடி எஸ்டேட் தொழிலாளர்

வால்பாறை : வால்பாறை, கல்லார்குடி செட்டில்மென்ட்டில், காடர் இனத்தை சேர்ந்த பழங்குடியினர், 23 குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த செட்டில்மென்ட்டில், கடந்த, 2019ம் ஆண்டு பெய்த கனமழையில் வீடுகள் அனைத்தும் மண்ணில் புதைந்தன.இதனால் பழங்குடியின மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், தற்காலிகமாக தாய்முடி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, பழங்குடியினர் தங்கியுள்ளனர்.

இதனிடையே, வன உரிமை சட்டப்படி, தாய்முடி தெப்பக்குள மேட்டுப்பகுதியில் வீடு கட்ட இடம் தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால், இன்று வரை கல்லார்குடி மக்களுக்கு வீடு கட்ட இடம் வழங்கவில்லை.பழங்குடியின மக்களின் செயல்பாட்டாளர் தனராஜ் கூறுகையில், ''பாரம்பரியமாக வசித்து வந்த வீடுகளை இழந்து தவிக்கும், கல்லார்குடி பழங்குடியின மக்களுக்கு, தெப்பக்குளம் மேட்டுப்பகுதியில் வீடு கட்ட இடம் வழங்க வலியுறுத்தி, அக்., 2ம் தேதி திட்டமிட்ட படி போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X