ரூ.93 லட்சத்தில் மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூ.93 லட்சத்தில் மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

Added : செப் 23, 2021
Share
பாகூர்-பாகூர் தொகுதியில் 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு கடற்கரை பகுதியில், மத்திய அரசின் 'சுதேசி தர்ஷன்' திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் செலவில், கடற்கரை சுற்றுலா திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.தற்போது, அதன் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், மணப்பட்டு கிராமத்தில்

பாகூர்-பாகூர் தொகுதியில் 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு கடற்கரை பகுதியில், மத்திய அரசின் 'சுதேசி தர்ஷன்' திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் செலவில், கடற்கரை சுற்றுலா திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.தற்போது, அதன் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், மணப்பட்டு கிராமத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலையை 83 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளது.பாகூர் ஏரியில் 10 லட்சம் ரூபாய் செலவில் மண் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை எம்.எல்.ஏ., செந்தில்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X