பொது செய்தி

இந்தியா

ராஜ்யசபா வேட்பாளர் தேர்விற்காக எதிர்க்கட்சித் தலைவர் சிவா கண்டனம்:

Added : செப் 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'ராஜ்ய சபா தேர்தல் வேட்பாளர் தேர்விற்காக அரசு 3 வார காலம் முடக்கப்பட்டு விட்டது' என எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:ராஜ்யசபா எம்.பி., பதவி, ஆளும் கூட்டணியின் உள் விவகாரம், அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. வேட்பாளரை முன்கூட்டியே இரு கட்சிகளும் அறிவித்து இருக்கலாம்.ராஜ்யசபா எம்.பி., தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதிலேயே

புதுச்சேரி-'ராஜ்ய சபா தேர்தல் வேட்பாளர் தேர்விற்காக அரசு 3 வார காலம் முடக்கப்பட்டு விட்டது' என எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:ராஜ்யசபா எம்.பி., பதவி, ஆளும் கூட்டணியின் உள் விவகாரம், அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. வேட்பாளரை முன்கூட்டியே இரு கட்சிகளும் அறிவித்து இருக்கலாம்.ராஜ்யசபா எம்.பி., தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதிலேயே ஆட்சியாளர்கள் மக்கள் நல திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் 3 வார காலத்தை வீணடித்துள்ளனர். அமைச்சர்களும், முதல்வரும் இதுபற்றிய சிந்தனையிலேயே இருந்தனர். இதனால் புதுச்சேரி அரசு மூன்று வார காலம் முடங்கி கிடந்தது. இதை ஏற்க முடியாது. இதற்காக என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணியை கண்டிக்கிறோம். இனிமேலாவது அரசு வேகமாக செயல்பட வேண்டும். என்.ஆர்.காங்., ஏதாவது வாக்குறுதியை பெற்றுக் கொண்டு எம்.பி. பதவியை விட்டுக் கொடுத்ததா. பா.ஜ., என்ன வாக்குறுதி அளித்து எம்.பி., பதவியை தட்டிப்பறித்தது என மக்களுக்கு தெரிவிக்க முன்வர வேண்டும். அதாவது, புதுச்சேரி அரசின் கடன் தள்ளுபடி, மத்திய அரசின் மானியம் 90 சதவீதமாக உயர்த்தி வழங்குவது, மாநில அந்தஸ்து, மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது குறித்து ஏதாவது உறுதி அளிக்கப்பட்டதா, என மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X