பொது செய்தி

இந்தியா

மருந்துகளின் பக்க விளைவுகளை நோயாளிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்

Added : செப் 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-''பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலுக்கு வந்த பிறகு, மருத்துவச் செலவுக்கு வசதியில்லாமல் இறந்தவர்களின் விகிதம் குறைந்துள்ளது'' என கவர்னர் தமிழிசை கூறினார். புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காஜியாபாத் பார்மகோ விஜிலன்ஸ் ஆப் இந்தியா, புதுச்சேரி மருந்துகள் கட்டுப்பாட்டு துறை சார்பில், நோயாளிகள்

புதுச்சேரி-''பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலுக்கு வந்த பிறகு, மருத்துவச் செலவுக்கு வசதியில்லாமல் இறந்தவர்களின் விகிதம் குறைந்துள்ளது'' என கவர்னர் தமிழிசை கூறினார். புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காஜியாபாத் பார்மகோ விஜிலன்ஸ் ஆப் இந்தியா, புதுச்சேரி மருந்துகள் கட்டுப்பாட்டு துறை சார்பில், நோயாளிகள் பாதுகாப்பு வார விழா, கோரிமேடு மருந்து துறையில் நடந்தது.விழாவில் கவர்னர் தமிழிசை தலைமை தாங்கி, பேசியதாவது: பொதுமக்களுக்கு மருந்துகளின் பக்கவிளைவுகள் குறித்து சந்தேகம் ஆழமாக பதிந்துள்ளது. இவற்றை போக்க டாக்டர்கள் நோயாளிகளிடம் தெளிவு படுத்த வேண்டும். நோயாளிகளின் வயது வரம்பு ,நோயின் தாக்கத்தை பொறுத்து துல்லியமான அளவில் மருந்து வழங்க வேண்டும். மாத்திரை சாப்பிட்ட பின்னர் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறை குறித்து பரிந்துரை செய்ய வேண்டும்.நோயாளிகளுக்கு நோய் தாக்கம் மற்றும் மருந்துகளின் பக்கவிளைவுகள் குறித்து தெளிவுபடுத்த நேரம் ஒதுக்க வேண்டும். டாக்டர்கள், செவிலியர்கள், தற்போதைய மருந்துகள் பற்றிய அறிவை தொடர்ந்து அறிய வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் உலகிலேயே மிகப்பெரிய இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம். இதை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் செயல்பாட்டிற்கு பிறகு மருத்துவச் செலவுக்கு வசதியில்லாமல் இறந்தவர்களின் விகிதம் குறைந்துள்ளது.இவ்வாறு கவர்னர் பேசினார். சுகாதாரத்துறை செயலர் அருண், இணை இயக்குநர் அனந்தலட்சுமி உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X