பொது செய்தி

தமிழ்நாடு

அறிவித்த சம்பளத்தை குறைத்து வழங்காதீங்க

Added : செப் 23, 2021
Share
Advertisement
வால்பாறை : அரசு அறிவித்துள்ள சம்பளத்தை குறைத்து வழங்குவதற்கு, பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது என, எல்.பி.எப்., தொழிற்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஆனைமலை திராவிட தொழிலாளர் சங்க செயற்க்குழு கூட்டம், தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, இணை பொதுச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், 'தேயிலை

வால்பாறை : அரசு அறிவித்துள்ள சம்பளத்தை குறைத்து வழங்குவதற்கு, பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது என, எல்.பி.எப்., தொழிற்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆனைமலை திராவிட தொழிலாளர் சங்க செயற்க்குழு கூட்டம், தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, இணை பொதுச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், 'தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு அறிவித்துள்ள சம்பளம், 425.40 ரூபாயை உடனடியாக எஸ்டேட் நிர்வாகங்கள் வழங்க வேண்டும். அறிவித்துள்ள சம்பளத்தை குறைத்து வழங்க, நீலகிரியில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.அறிவித்துள்ள சம்பளத்தை குறைத்து வழங்குவதை எல்.பி.எப்., தொழிற்சங்கம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது,' என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X