கோடநாடு வழக்கில் இருவரிடம் விசாரணை| Dinamalar

கோடநாடு வழக்கில் இருவரிடம் விசாரணை

Added : செப் 23, 2021 | |
ஊட்டி : கோடநாடு வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி இருவரிடம் நேற்று ஆறு மணி நேரம் விசாரணை நடந்தது.நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம், 2017ம் ஆண்டு, ஏப்., 24ல் நடந்தது. சம்பவத்துக்கு பின், ஆறு பேர் கும்பல் கூடலுார் வழியாக கேரளாவுக்கு தப்பினர். அதில், சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோர் இருந்துள்ளனர். தற்போது இருவரும் ஜாமினில்

ஊட்டி : கோடநாடு வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி இருவரிடம் நேற்று ஆறு மணி நேரம் விசாரணை நடந்தது.நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம், 2017ம் ஆண்டு, ஏப்., 24ல் நடந்தது. சம்பவத்துக்கு பின், ஆறு பேர் கும்பல் கூடலுார் வழியாக கேரளாவுக்கு தப்பினர். அதில், சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோர் இருந்துள்ளனர். தற்போது இருவரும் ஜாமினில் உள்ளனர்.நேற்று இருவரிடம் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் தலைமையில் தனிப்படை போலீசார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து இன்றும் விசாரணை நடக்கிறது.மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் நிருபர்களிடம் கூறுகையில்,''ஆக., 17 முதல் துவங்கிய மறு விசாரணையில், இதுவரை 29 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் ஊழியர்களிடமும் விசாரிக்கப்பட்டது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X