பொது செய்தி

இந்தியா

வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Added : செப் 23, 2021
Share
Advertisement
வில்லியனுார்,-அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் ஏழாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.சாய் அரங்கில் நடந்த விழாவில், கல்விக் குழுமத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனர் ராதா ராமச்சந்திரன், நிர்வாக இயக்குனர் ராஜிவ் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மருத்துவக் கல்லுாரி (முதுகலை) டீன் மகாதேவன் வரவேற்றார். டீன் ரத்தினசாமி

வில்லியனுார்,-அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் ஏழாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.சாய் அரங்கில் நடந்த விழாவில், கல்விக் குழுமத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனர் ராதா ராமச்சந்திரன், நிர்வாக இயக்குனர் ராஜிவ் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மருத்துவக் கல்லுாரி (முதுகலை) டீன் மகாதேவன் வரவேற்றார். டீன் ரத்தினசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங், 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.மேலும், பல்கலைக்கழக தேர்வில் முதல் மற்றும் 2ம் இடம் பிடித்த 23க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார். கல்லுாரி முதன்மை இயக்க அலுவலர் டாக்டர் வித்யா, மருத்துவ கண்காணிப்பாளர் வி.பி. சிங், துணை மருத்துவ கண்காணிப்பாளர் சுரேஷ், துணை முதல்வர் மங்கையற்கரசி, பொது மேலாளர் சவுந்தரராஜன், வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின முதல்வர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் முத்துகுமாரவேல் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X