பொது செய்தி

இந்தியா

ராஜ்ய சபா எம்.பி., தேர்தல்: பா.ஜ., வேட்பு மனு தாக்கல்

Added : செப் 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி ராஜ்ய சபா எம்.பி., தேர்தலில், ஆளும் கூட்டணியை சேர்ந்த என்.ஆர்.காங்., ஆதரவுடன், பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதி, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.புதுச்சேரி ராஜ்ய சபா எம்.பி., கோகுலகிருஷ்ணனின் பதவிக் காலம் வரும் 6ம் தேதி முடிவடைகிறது. அதனையொட்டி, இப்பதவிக்கான தேர்தல், வரும் 4ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம்

புதுச்சேரி-புதுச்சேரி ராஜ்ய சபா எம்.பி., தேர்தலில், ஆளும் கூட்டணியை சேர்ந்த என்.ஆர்.காங்., ஆதரவுடன், பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதி, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.புதுச்சேரி ராஜ்ய சபா எம்.பி., கோகுலகிருஷ்ணனின் பதவிக் காலம் வரும் 6ம் தேதி முடிவடைகிறது. அதனையொட்டி, இப்பதவிக்கான தேர்தல், வரும் 4ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதற்கான மனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி, நேற்றுடன் முடிந்தது.இப்பதவியை பிடிக்க ஆளும் கூட்டணியை சேர்ந்த என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவியது.நீண்ட இழுபறிக்கு பின், பா.ஜ., தலைமை, அரசியல் சாராத முக்கிய பிரமுகர் மூலம் நேரடியாக முதல்வர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதனையேற்று முதல்வர் ரங்கசாமி, ராஜ்ய சபா எம்.பி., பதவியை பா.ஜ.,விற்கு விட்டுக் கொடுத்தார்.அதையடுத்து, பா.ஜ., மூத்த நிர்வாகியான மாநில பொருளாளர் செல்வகணபதி,64; வேட்பாளராக நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டார். அவர் அன்று இரவே, முதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.கட்சியின் மாநில பொறுப்பாளரான நிர்மல் குமார் சுரானா நேற்று காலை புதுச்சேரி வருகை தந்தார். அவர், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர் செல்வகணபதியை அறிமுகம் செய்து வைத்தார்.பகல் 1:45 மணிக்கு மனு தாக்கல் செய்ய, கட்சியின் மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் சட்டசபைக்கு சென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்.பின்னர் அவர்களுடன், அதே வளாகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்று, சட்டசபை செயலர் முனிசாமியிடம் பகல் 1:50 மணிக்கு, செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.வேட்பு மனுவை முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ., ஜான்குமார் ஆகியோர் முன்மொழிந்தனர்.அதனைத் தொடர்ந்து அமைச்சர் சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஆகியோரும், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன் ஆகியோரும் முன்மொழிந்து செல்வகணபதி பெயரில் இரண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.இப்பதவிக்கு ஏற்கனவே நான்கு சுயேச்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர். இறுதி நாளான நேற்று மாலை, புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்த டாக்டர் ஹரிகரன், பாண்டிச்சேரி மக்கள் உரிமை கட்சி சார்பில் மனு தாக்கல் செய்தார்.இதனால், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு பா.ஜ., வேட்பாளர் உட்பட 6 பேர் மொத்தம் 8 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுக்கள் இன்று பகல் 12.௦௦ மணிக்கு வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்படுகிறது.அதில், ஓட்டுரிமை உள்ள எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழியாத காரணத்தினால், 5 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும். இதனால், பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.இருப்பினும். இதுகுறித்து, 27ம் தேதி மனு வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு முடிந்த பிறகு, மாலை 3:00 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.புதுச்சேரியின் முதல் பா.ஜ., எம்.பி.,புதுச்சேரி அரசியல் வரலாற்றில், ராஜ்யசபா எம்.பி. பதவியை, பா.ஜ., முதல் முறையாக பெறுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் 1963ம் ஆண்டிலிருந்து இதுவரை ஒன்பது முறை ராஜ்யசபா தேர்தல் நடந்துள்ளது. காங்., கட்சி ஐந்து முறை ராஜ்ய சபா எம்.பி., பதவியை கைப்பற்றியுள்ளது.தி.மு.க., - அ.தி.மு.க., தலா இரண்டு முறை ராஜ்ய சபா எம்.பி., பதவியை கைப்பற்றியுள்ளன. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல் முறையாக பா.ஜ.,வை சேர்ந்த செல்வகணபதி, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.வைரலாகும் 'மீம்ஸ்'மல்லாடி கிருஷ்ணாராவுக்கு ராஜ்ய சபா பதவி கிடைக்காதது குறித்து சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்'கள் உலா வருகின்றன. அதில், வீட்டு வாசலில் படுத்திருக்கும் மல்லாடி கிருஷ்ணாராவ், திடீரென எழுந்து அழுகிறார்.அப்போது ஒருவர், 'எதற்கு அழுகிறாய். புதுசா என்ன நடந்தது. இன்னொரு முறை கேட்டுக்கொண்டா போச்சு. சரி படுங்க' என தெலுங்கு மொழியில் கூறுகிறார்.காங்., கொண்டாட்டம்புதுச்சேரியில் காங்., ஆட்சி கவிழ காரணமாக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவிற்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி கிடைக்காததை அறிந்த காங்., கட்சியினர், தங்கள் கட்சி அலுவலகம் முன் நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X