பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,

Added : செப் 23, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : தேங்காய் எண்ணெய்க்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுவதை கண்டித்து, பொள்ளாச்சி சப் - கலெக்டரிடம், மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், வால்பாறை எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி ஆகியோர், சப் - கலெக்டரை சந்தித்து, தங்கள் தொகுதி பிரச்னைகள் குறித்து மனு அளித்தனர். அவர்கள், கூட்டாக நிருபர்களிடம்
 தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,


பொள்ளாச்சி : தேங்காய் எண்ணெய்க்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுவதை கண்டித்து, பொள்ளாச்சி சப் - கலெக்டரிடம், மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், வால்பாறை எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி ஆகியோர், சப் - கலெக்டரை சந்தித்து, தங்கள் தொகுதி பிரச்னைகள் குறித்து மனு அளித்தனர்.

அவர்கள், கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு தேங்காய் எண்ணெய்க்கு மட்டும், 18 சதவீதமாக ஜி.எஸ்.டி.,யை உயர்த்துவது, கண்டனத்துக்கு உரியது. அது, ஏற்கனவே விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும்.தேங்காய்க்கு மத்திய அரசு தரும், 105 ரூபாய் ஆதார விலையை அதிகரிக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் இருந்து, பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களில் வேகமாக பரவும் வாடல் நோய்க்கு தீர்வு காண வேண்டும். பி.ஏ.பி., திட்டம் கிடைப்பதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த வி.கே.பழனிசாமி பெயரில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

அதே பெயரில் தான் மண்டபம் திறக்கப்பட வேண்டும்; பெயர் மாற்றக்கூடாது.பி.ஏ.பி., பாசன கால்வாய்களை துார்வார, குடிமராமத்து திட்டம் வாயிலாக நடவடிக்கை எடுத்து, கடைமடைகளுக்கு தண்ணீர் சென்றடைய வழி செய்ய வேண்டும்.பொள்ளாச்சி குடிசை மாற்று வாரிய, 550 வீடுகள், தகுதியான நபர்களுக்கு சென்றடைய வேண்டும். கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தை விரைவில் திறக்க வேண்டும். வால்பாறை தொகுதி, நல்லாறு பகுதி பழங்குடியின மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்.இவை உள்ளிட்ட கோரிக்கைகளை, சப் - கலெக்டர் வாயிலாக அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X