ஐ.நா., தூதர் யார்? தலிபான்கள் போர்க்கொடி

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
காபூல்: கடந்த மாதம் ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அதன் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீ, ஐ.நா., துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து தலிபான் அமைப்பு, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.அதில், 'ஆப்கனில் தலிபான் அரசு அமைந்துள்ளதால், முந்தைய அரசின் ஐ.நா., துாதர் கிராம் இசாகுசய் நியமனம் செல்லாது' என,
UN, Taliban, Afghanistan

காபூல்: கடந்த மாதம் ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அதன் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீ, ஐ.நா., துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து தலிபான் அமைப்பு, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், 'ஆப்கனில் தலிபான் அரசு அமைந்துள்ளதால், முந்தைய அரசின் ஐ.நா., துாதர் கிராம் இசாகுசய் நியமனம் செல்லாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஐ.நா.,வின் புதிய துாதராக, சுஹைல் ஷாஹீ நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை தற்போது நடைபெறும் ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், ஆப்கன் சார்பில் பேச அனுமதிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.


latest tamil news



ஆனால், தற்போது நடந்து வரும் ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், ஆப்கன் துாதர் கிராம் இசாகுசய் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதற்கிடையே, தலிபானை ஐ.நா., உட்பட பல நாடுகள் இன்னும் அங்கீகரிக்காத நிலையில், அதன் புதிய துாதர் நியமனம் ஏற்கப்படுமா என தெரியவில்லை.

இது குறித்து, ஐ.நா., அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆப்கன் துாதராக கிராம் இசாகுசய் தான் உள்ளார். தலிபான் துாதர் நியமனம் குறித்து, ஐ.நா., குழு ஆராய்ந்து முடிவெடுக்கும். அதுவரை தலிபான் துாதருக்கு பொதுச் சபை கூட்டத்தில் தற்காலிக இருக்கை ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202110:31:06 IST Report Abuse
jayvee தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஒரு நாடு ஆப்கான்.. அப்படியிருக்க அபாகனிஸ்தானிற்கு எப்படி தூதரை அனுமதிக்க முடியும் ? ஐநா வும் சீனாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை இது காட்டுகிறது ..
Rate this:
Cancel
Ramakrishnan Sitaraman - Chennai,இந்தியா
23-செப்-202108:21:30 IST Report Abuse
Ramakrishnan Sitaraman உங்கள் செய்தியில் '....பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை..' என்று எழுதி உள்ளீர்கள். அது 'பல நாடுகள் அங்கீகரித்துள்ளது' என்பது போல ஒரு தோற்றம் கொடுக்கிறது. அது தவறு. பாக்கிஸ்தான், சீனா, துருக்கி, கத்தார் தவிர மீதமுள்ள எந்த நாடும் தீவிரவாத தாலிபானை அங்கீகரிக்கவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X