பொது செய்தி

தமிழ்நாடு

காந்திய வேட்டி நுாற்றாண்டு விழா திருப்பூரில் கொண்டாட்டம்

Added : செப் 23, 2021
Share
Advertisement
திருப்பூர் : 'கிராம பொருளாதாரத்தை முன்னேற்றி, காந்தியின் கனவை நனவாக்க வேண்டும்' என்று, திருப்பூரில் காந்திய வேட்டிநுாற்றாண்டு விழாவில் வலியுறுத்தப்பட்டது.கடந்த 1921ம் ஆண்டு செப்., 22ல், தமிழகத்தில் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இருந்து, வேட்டியை தனது உடையாக அணிவதாக உறுதி பூண்டு செயல்படுத்தினார். இதன் நுாறாவது ஆண்டு நிறைவையொட்டி, 'ராம்ராஜ் காட்டன்'
 காந்திய வேட்டி நுாற்றாண்டு விழா திருப்பூரில் கொண்டாட்டம்

திருப்பூர் : 'கிராம பொருளாதாரத்தை முன்னேற்றி, காந்தியின் கனவை நனவாக்க வேண்டும்' என்று, திருப்பூரில் காந்திய வேட்டிநுாற்றாண்டு விழாவில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த 1921ம் ஆண்டு செப்., 22ல், தமிழகத்தில் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இருந்து, வேட்டியை தனது உடையாக அணிவதாக உறுதி பூண்டு செயல்படுத்தினார். இதன் நுாறாவது ஆண்டு நிறைவையொட்டி, 'ராம்ராஜ் காட்டன்' சார்பில், காந்திய வேட்டி நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று திருப்பூரில் நடந்தது.ராம்ராஜ் காட்டன் தலைவர் நாகராஜன் பேசுகையில், ''காந்தி தன் அடையாளமாக அறிவித்த வேட்டி என்ற எளிய ஆடையை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமைப்படுகிறோம்,'' என்றார்.கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில்,'

'காந்தி எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அவரது கொள்கைகளை பின்பற்றி வாழ வேண்டும். கிராம பொருளாதாரத்தை முன்னேற்றி, அவரது கனவை நனவாக்க வேண்டும்,'' என்றார்.'மகாத்மாவை கொண்டாடுவோம்' என்ற நுாலை, கோவை ரூட்ஸ் குழும தலைவர் ராமசாமி பெற்று கொண்டார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் குடும்பத்தினர் 100 பேர், 100 நெசவாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X