என்.டி.ஏ., நுழைவு தேர்வில் பெண்கள்: மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: என்.டி.ஏ., எனப்படும், தேசிய ராணுவ அகாடமியின் நுழைவுத் தேர்வை, பெண்கள் அடுத்த ஆண்டு முதல் எழுத அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. நடப்பாண்டு முதலே பெண்களும் தேர்வு எழுத ஆவன செய்யுமாறு உத்தரவிட்டது.ராணுவம், கடல் மற்றும் விமானப் படைகளில், வீரர்களுக்கான நிரந்தர பணியில் சேர, என்.டி.ஏ., எனப்படும் தேசிய ராணுவ அகாடமி
NDA Exam, Supreme Court, SC, Rejects, Centre Plea

புதுடில்லி: என்.டி.ஏ., எனப்படும், தேசிய ராணுவ அகாடமியின் நுழைவுத் தேர்வை, பெண்கள் அடுத்த ஆண்டு முதல் எழுத அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. நடப்பாண்டு முதலே பெண்களும் தேர்வு எழுத ஆவன செய்யுமாறு உத்தரவிட்டது.

ராணுவம், கடல் மற்றும் விமானப் படைகளில், வீரர்களுக்கான நிரந்தர பணியில் சேர, என்.டி.ஏ., எனப்படும் தேசிய ராணுவ அகாடமி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வு, ஆண்டுக்கு இருமுறை நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுத ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. பெண்கள் இந்த தேர்வை எழுத முடியாது.

இந்த பாலின பாகுபாட்டை எதிர்த்து, குஷ் கல்ரா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பத்தி கூறியதாவது: என்.டி.ஏ., தேர்வு எழுத பெண்கள் அனுமதிக்கப்படுவர். ஆனால், பெண்களுக்கான பாடத் திட்டம் மற்றும் பயிற்சிகளில் பல மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது.

இது தொடர்பான அறிவிக்கை அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படும். எனவே, நவம்பர் 14ல் நடைபெற உள்ள நடப்பாண்டுக்கான என்.டி.ஏ., தேர்வை பெண்கள் எழுத முடியாது. இது தொடர்பான உத்தரவை நிறைவேற்றுவதில் இருந்து மத்திய அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 'பெண்கள் அடுத்த ஆண்டு நுழைவுத் தேர்வை எழுதினால், 2023ல் தான் அவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்' என, மனுதாரர் குஷ் கல்ரா தரப்பில் வாதிடப்பட்டது.


latest tamil news


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நாட்டிலும், எல்லையிலும் அவசர நிலைகளை எதிர்கொள்வது ராணுவத்துக்கு புதிதல்ல. அவசர நிலைகளை சமாளிப்பது அவர்களுடைய பயிற்சியின் ஒரு பகுதியாகவே உள்ளது. எனவே, இந்த அவசர நிலையையும் அவர்கள் திறம்பட சமாளிக்க வேண்டும். நவம்பர் 14ல் நடைபெறும் என்.டி.ஏ., நுழைவுத் தேர்வை பெண்கள் எழுத ஆவன செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


டேராடூன் ராணுவ கல்லுாரி: மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவு!உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஆர்.ஐ.எம்.சி., எனப்படும் ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரியில் பெண்களும் சேர அனுமதிக்க கோரி, வழக்கறிஞர் கைலாஸ் உத்தாவ்ராவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

டேராடூன் ராணுவ கல்லுாரி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 18ல் நடைபெறுவதாக அறிந்தோம். அதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 30ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. கால அவகாசம் குறைவாக இருப்பதால், ராணுவ கல்லுாரியில் பெண்களை சேர்ப்பது குறித்து, இரண்டு வாரங்களில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Ramkumar - Tiruvarur,இந்தியா
24-செப்-202118:40:33 IST Report Abuse
S Ramkumar மற்ற மாணவர்களின் கவனம் சிதற வாய்ப்புண்டு என் டி ஏ நிறைய சிறந்த ராணுவ வீரர்களை நாட்டிற்கு அளித்து வருகிறது. அதில் நீதி மன்றம் மூக்கை நுழைக்க தேவையில்லை. இராணுவத்தில் வேறு பிரிவுகளில் பெண்களை சேர்க்கலாம். அல்லது குறிப்பிட்ட சதவீதம் தான் பெண்களுக்கு என்று கொடுக்கலாம்.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
23-செப்-202111:38:33 IST Report Abuse
Kumar மூர்க்க தாலிபான்ஸ் நோட் திஸ் பாய்ண்ட். இந்தியாவில் பெண்கள் நிலை என்னவென்று. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Priyan - Madurai,இந்தியா
23-செப்-202110:44:28 IST Report Abuse
Priyan பாதுகாப்பு வளையத்திற்குள் அரசு, நீதி மன்ற நிர்வாகம் பாதுகாப்பின் (ராணுவ) அனுமதி பெற்று நுழைவது நல்லது. நீதிமன்ற அதிகாரம் செலுத்தும் இடம் அல்ல ராணுவம் .பாதுகாப்பிற்கு உடல் தகுதி மற்றும் மன உறுதி அவசியம். முதலில் பாலின பாகுபாட்டை நிர்வாக, அரசியல் மற்றும் நீதிமன்றத்தில் சீர்திருத்த மனுதாரர் கோரி இருக்க வேண்டும். இதில் உள்நோக்கம் இருக்கலாம். அவரசமாக அனுமதிக்க வேண்டிய தேவை என்ன? ராணுவத்தில் பெண் உளவாளிகள் ஊடுருவி சேர்ந்தால், நிலைமை மோசம் ஆகும். இரு வழக்கறிஞர்கள் , ஒரு நீதிபதி தீர்மானிக்கும் காரியம் அல்ல. மத்திய அரசின் கோரிக்கை மற்றும் நீதிமன்ற நிராகரிப்பு பாதுகாப்பிற்கு உகந்தல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X