பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகள் தாக்குதல் பீதி: கடலோர பகுதியில் கண்காணிப்பு

Added : செப் 23, 2021
Share
Advertisement
மங்களூரு-பண்டிகை நாட்களில் கடலோர பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்த, பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டுவதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளதால், கர்நாடக கடலோர பகுதிகளில், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது.இது குறித்து, தட்சிண கன்னடாவின், மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நேற்று கூறியதாவது:கர்நாடக கடலோர பகுதியான மங்களூரை, பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளதாக,

மங்களூரு-பண்டிகை நாட்களில் கடலோர பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்த, பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டுவதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளதால், கர்நாடக கடலோர பகுதிகளில், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது.

இது குறித்து, தட்சிண கன்னடாவின், மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நேற்று கூறியதாவது:கர்நாடக கடலோர பகுதியான மங்களூரை, பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் பண்டிகைகள் வருவதால், பயங்கரவாதம் நிகழ்த்தும் அபாயம் உள்ளது.

எனவே, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்.மங்களூரு சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம், துறைமுகம், பெட்ரோலிய பொருட்கள் சேகரிப்பகம், பெரிய தொழிற்சாலைகள் உட்பட, மிகவும் பதற்றமான பகுதிகள் மங்களூரில் உள்ளன.அனைத்து இடங்களிலும், கூடுதல் போலீசார், மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மங்களூரு சர்வதேச விமான நிலையம் சுற்றுப்பகுதிகளில், கூடுதல் பாதுகாப்பு உள்ளது.

பொது மக்களுக்கும், எச்சரிக்கையாக இருக்கும்படி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. விமான நிலைய சுற்றுப்பகுதிகளில் வசிப்போர், காற்றில் பறக்கும் விளையாட்டு பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என, உத்தரவிட்டுள்ளோம். அறிமுகமில்லாதோருக்கு, வீட்டை வாடகைக்கு கொடுக்கும்போது, மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X