பொது செய்தி

தமிழ்நாடு

கலைஞர் "டிவி' சொத்துக்களை பறிமுதல் நடவடிக்கையில் அமலாக்கத் துறை

Updated : ஜூலை 30, 2011 | Added : ஜூலை 30, 2011 | கருத்துகள் (27)
Share
Advertisement
"சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (பி.எம்.எல்.ஏ.,), கலைஞர் "டிவி'யின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை, அமலாக்கத் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது' என, அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:கலைஞர் "டிவி'க்கு, 215 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், சென்னை உட்பட, தமிழகத்தின் பல
கலைஞர் "டிவி,' சொத்துக்கள் பறிமுதல் நடவடிக்கை, அமலாக்கத் துறை இயக்குனரகம், Enforcement Directorate,  property of Kalaingar TV,

"சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (பி.எம்.எல்.ஏ.,), கலைஞர் "டிவி'யின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை, அமலாக்கத் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது' என, அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:கலைஞர் "டிவி'க்கு, 215 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் இருப்பது தெரியவந்துள்ளது.அதனால், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், அவற்றைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.விதிகளை மீறி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்காகவும், சிலருக்கு சலுகை காட்டியதற்காகவும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும், பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது. அந்த லஞ்சப் பணத்தை மீட்கும் வகையில், இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

கலைஞர் "டிவி'யில், கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழிக்கு, 80 சதவீத பங்குகளும், அந்த "டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு, 20 சதவீத பங்குகளும் உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற "டி.பி' ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்தது என்பது, சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறி, 2,100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ஏற்கனவே "டிபி' குரூப், வெர்ஜின் மொபைல், மில்கிவே டெவலப்பர்ஸ் மற்றும் இடிஏ ஸ்டார் குரூப் ஆகிய நிறுவனங்களுக்கு, அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இவ்வாறு அமலாக்கத் துறை உயர் அதிகாரி கூறினார்.நமது சிறப்பு நிருபர்

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V. Mani - chennai ,இந்தியா
30-ஜூலை-201113:10:40 IST Report Abuse
V. Mani உங்கள் கலைஞர் டிவி யில் ன்னு தினம் நூறு தரம் சொல்றாங்க. உண்மையும் அதுதானே? அது நம்ம பணத்த ஆட்டயப் போட்டு அரம்பிச்சதுதான்னு சிபிஐ க்கு ஆதாரம் கெடச்சிருக்கரதால ( திருட்டு சொத்த ) ஜப்தி பண்றாங்க. இதுல என்ன தப்பு இருக்கு? சட்டப் படி திருட்டு சொத்தை கோர்ட்டில் காண்பித்தால்தான் சார்ஜ் ஷீட்( குற்றப் பத்திரிக்கை ) பதிய முடியும்! சபாஷ்!!
Rate this:
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
30-ஜூலை-201111:28:46 IST Report Abuse
sundaram எங்களுக்குத்தான் பேரன் (கனியின் அன்பு மகன்) நடத்துற ஆதித்யன் அலை வரிசை இருக்கே, அப்போ என்ன பண்ணுவீங்க.
Rate this:
Cancel
IRAIYANBAN - Madurai,இந்தியா
30-ஜூலை-201111:17:50 IST Report Abuse
IRAIYANBAN கல்வியிலும் சமத்துவம் வர வேண்டும் என்கிறார் கலைஞர். பொருளாதாரத்தில் அனைத்து மக்களும் சமத்துவம் பெற வேண்டாமா? உங்கள் குடும்பம் மட்டுமே வாழ வேண்டுமா ? 87 வயதில் பணம் பதவியை விட்டு அமைதியான வாழ்க்கை வாழுங்கள். மக்களும் ( உங்கள் மக்கள் மட்டும் அல்ல ) அமைதியாக வாழட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X