ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தலிபான்களுடன் ஒப்பிட்டு பேசிய ஜாவேத் அக்தருக்கு 'நோட்டீஸ்'

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மும்பை: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தலிபான்களுடன் ஒப்பிட்டு பேசியதற்காக, ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தருக்கு, மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.மஹாராஷ்டிராவில் ஹிந்தி திரைப்பட பாடலாசிரியராக இருப்பவர் ஜாவேத் அக்தர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தலிபான் பயங்கரவாதிகள் கையில் மீண்டும் சிக்கியுள்ளது பற்றி கருத்து தெரிவித்த
RSS, Taliban, Javed Akhtar

மும்பை: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தலிபான்களுடன் ஒப்பிட்டு பேசியதற்காக, ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தருக்கு, மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் ஹிந்தி திரைப்பட பாடலாசிரியராக இருப்பவர் ஜாவேத் அக்தர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தலிபான் பயங்கரவாதிகள் கையில் மீண்டும் சிக்கியுள்ளது பற்றி கருத்து தெரிவித்த அவர், 'தலிபான்களின் செயல்கள் காட்டுமிராண்டித்தனமானது. ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம் மற்றும் வி.எச்.பி., போன்ற அமைப்பை ஆதரிப்பவர்களின் நடவடிக்கைகளும், அது போன்றது தான்' என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, ஜாவேத் அக்தர் மன்னிப்பு கேட்க கோரி, ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.


latest tamil news



இந்நிலையில், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் துபே கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., ஒரு தேசபக்த அமைப்பு. அதை, தலிபான் பயங்கரவாத அமைப்புடன் ஜாவேத் அக்தர் ஒப்பிட்டது, பெரும் கண்டனத்துக்குரியது. இதற்காக அவர் 'பகிரங்கமாக, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்' எனக் கோரி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். ஏழு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், அக்தர் மீது 100 கோடி ரூபாய் கேட்டு, மான நஷ்ட வழக்கு தொடர்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
23-செப்-202118:17:09 IST Report Abuse
spr "தலிபான்களின் செயல்கள் காட்டுமிராண்டித்தனமானது. "இப்படி உண்மையைச் சொன்னதற்காக தாலிபான் அமைப்பே அவருக்கு தண்டனை தரும் எனவே பிரச்சினையில்லை
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
23-செப்-202111:25:53 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN பசுவிற்கும் பன்றிக்கும் வித்யாசம் தெரியாத கீழ்த்தரமான சிந்தனை கொண்டவன் இவன். இவனை தாரூல் இஸ்லாம் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும், அங்கு ஓடும் பாலாறையும் தேனாறையும் இவன் அனுபவிக்கனும்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
23-செப்-202110:38:32 IST Report Abuse
jayvee இவர் பாலிவுட்டின் அப்சல் குரு .. கான்களின் ப்ரோபசர் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X