பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி அரையாடை புரட்சி நுாற்றாண்டு விழா

Added : செப் 23, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை காந்திய மியூசியத்தில் நடந்த காந்தி அரையாடை புரட்சி நுாற்றாண்டு விழா போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு டில்லியில் இருந்து வந்த அவரது பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா பரிசுகள், சான்றிதழ்கள்வழங்கினார்.காலையில் காந்தி அரையாடையுடன் பொதுக்கூட்டத்தில் பேசிய தற்போதைய காந்தி பொட்டல், மேலமாசி வீதியில் காந்தியின் அரையாடை புரட்சி நடந்த அறையில் உள்ள அவரது

மதுரை : மதுரை காந்திய மியூசியத்தில் நடந்த காந்தி அரையாடை புரட்சி நுாற்றாண்டு விழா போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு டில்லியில் இருந்து வந்த அவரது பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா பரிசுகள், சான்றிதழ்கள்வழங்கினார்.

காலையில் காந்தி அரையாடையுடன் பொதுக்கூட்டத்தில் பேசிய தற்போதைய காந்தி பொட்டல், மேலமாசி வீதியில் காந்தியின் அரையாடை புரட்சி நடந்த அறையில் உள்ள அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, சர்வசமய வழிபாடு நடத்தப்பட்டது.மாலையில் தமிழ்நாடு காந்தி நினைவு நிதி தலைவர் அண்ணாமலை வரவேற்பு, காந்தி மியூசிய தலைவர் மாணிக்கம் தலைமையுரை ஆற்றினர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி புகழேந்தி 'மகாத்மாவின் ஆடைப்புரட்சி நுாற்றாண்டு' என்ற விழா மலரை வெளியிட, டில்லி காந்தி அமைதி நிறுவன தலைவர் குமார் பிரசாந்த் பெற்றுக்கொண்டார்.

கலெக்டர் அனீஷ் சேகர், மத்திய காந்தி நினைவு நிதி செயலாளர் சஞ்சய் சின்ஹா, ராஜஸ்தான் தண்ணீர் மனிதர் ரஜேந்திர சிங், மியூசிய நிர்வாகிகள், அலுவலர்கள் பங்கேற்றனர். செயலாளர் நந்தா ராவ் நன்றி கூறினார்.ரயில்வேயில் காந்தி கார்னர்: மகாத்மாகாந்தி மதுரையில் அரையாடை அணிய துவங்கிய 1921 செப்., 22 ரயிலில் வந்தார். அவரது நினைவாக ஸ்டேஷனில் காந்தி கார்னர் பெயரில் நினைவு போட்டோ கண்காட்சி நிரந்தரமாகவுள்ளது. அங்கு நுாற்றாண்டு விழாவையொட்டி கோட்ட மேலாளர் ஆனந்த் படத்திற்கு மாலையணிவித்தார். கூடுதல் மேலாளர் ரமேஷ்பாபு, மூத்த வர்த்தக மேலாளர் பிரசன்னா, நிலைய இயக்குனர் கணேஷ், சுற்றுச்சூழல் அலுவலர் மகேஷ் கட்காரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X