பொது செய்தி

தமிழ்நாடு

வரிஏய்ப்பு செய்தால் உரிமம் ரத்து; அமைச்சர் எச்சரிக்கை

Added : செப் 23, 2021
Share
Advertisement
மதுரை : 'வரிஏய்ப்பு செய்தால் வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்' என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.மதுரையில் கலைஞர் நுாலகம் அமைய உள்ள இடத்தில் மரங்களை இடப்பெயர்வு செய்யும் பணியை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டார். அவர் கூறியதாவது: ரூ.100 கோடி செலவில் கலைஞர் நுாலகம் அமைய உள்ள இடத்தில் 18 மரங்களை அகற்றாமல் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள்

மதுரை : 'வரிஏய்ப்பு செய்தால் வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்' என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

மதுரையில் கலைஞர் நுாலகம் அமைய உள்ள இடத்தில் மரங்களை இடப்பெயர்வு செய்யும் பணியை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டார். அவர் கூறியதாவது: ரூ.100 கோடி செலவில் கலைஞர் நுாலகம் அமைய உள்ள இடத்தில் 18 மரங்களை அகற்றாமல் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறும் வரியை அரசுக்கு முறையாக செலுத்த வேண்டும்.

ஒரு வார காலமாக 103 நிறுவனங்களில் வணிக வரித்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. முறைகேட்டில் ஈடுபடும் வணிக நிறுவனங்களை கண்டறிந்து அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, எம்.எல்.ஏக்கள் தளபதி, பூமிநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X