காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை., தொலைநிலைக்கல்வி மே 2021 தேர்வுகளுக்கு இணையவழி மதிப்பீட்டு முறையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இளநிலைப்பிரிவு, முதுநிலைப்பிரிவு, முதுநிலை பட்டய பிரிவு, இளநிலை பட்டயபிரிவு, சான்றிதழ் பிரிவு ஆகிய பாடப்பிரிவுகளுக்கு முடிவு வெளியாகியுள்ளது. மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்று விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் பெற தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.500 வீதம் வரைவோலை எடுத்து விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்ற நாளிலிருந்து 7 நாட்களுக்குள் மறுமதிப்பீட்டிற்கு விடைத்தாளுக்கு ரூ.500 வீதம் வரைவோலை எடுத்து விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் பெறாமல் நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க, முடிவு வெளியான 7 நாட்களுக்குள் விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.600 வீதம் இணையவழியாக மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அழகப்பா பல்கலை., தேர்வாணையர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE