பொது செய்தி

தமிழ்நாடு

கோயில்களில் விரைவில் திருக்குறள் வகுப்புகள்: தமிழ் வளர்ச்சித் துறை

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை : திருக்கோயில்களில் மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்புகளை நடத்தும் முயற்சியில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது.தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சைவ, வைணவக் கோயில்களில் அறநிலையத் துறை சார்பில் அறநெறி வகுப்புகள் என்ற பெயரில் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் ஆகிய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றுடன்,

சென்னை : திருக்கோயில்களில் மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்புகளை நடத்தும் முயற்சியில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது.



latest tamil news


தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சைவ, வைணவக் கோயில்களில் அறநிலையத் துறை சார்பில் அறநெறி வகுப்புகள் என்ற பெயரில் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் ஆகிய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றுடன், மாணவர்களுக்கு திருக்குறளையும் நடத்த தமிழ் வளர்ச்சித் துறை முயற்சித்துள்ளது.


latest tamil news


இதுவரை, எத்தனை கோயில்களில் அறநெறி வகுப்புகள் நடத்தப்படுகின்றன; எவ்வளவு மாணவர்கள் பயன்பெறுகின்றனர்; திருக்குறள் வகுப்புகளை நடத்த தேவையான கூடுதல் நேரம் மற்றும் தேவைப்படும் ஆசிரியர்கள் பற்றிய அறிக்கையை ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் கேட்டுள்ளோம்.முழுமையான தகவல்கள் கிடைத்ததும், ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்வோம். அவர்களுக்கான ஊதியத்தை அறநிலையத் துறையே வழங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
23-செப்-202114:06:07 IST Report Abuse
vpurushothaman திருக்குறளோடு திருமந்திரத்தையும் கற்றுக் கொடுங்கள்.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
23-செப்-202112:58:03 IST Report Abuse
Sivagiri அறிவிலி-ஆலயத்துலயும் தொண்டர்களுக்கு - தலைர்களுக்கும்டீ திருக்குறள் வகுப்பு ஆரம்பிக்கலாம்ல - முதலில் தொண்டர்களுக்கு ஒழுக்கமுடைமை, தலைவர்களுக்கு பொய்யுரையாமை , பிறன்மனை தீண்டாமை , சொல்லிக் கொடுக்கலாம்
Rate this:
Cancel
chinnakaruppan - natham,இந்தியா
23-செப்-202112:54:46 IST Report Abuse
chinnakaruppan இதை சர்ச், மசூதிகளிலும் செய்யலாமே?. திருக்குறளை போதிக்கும் ஆசிரியர்களுக்கு அறநிலையத்துறை சம்பளம் கொடுப்பது போல், அங்கு நடத்துபவர்களுக்கு சர்ச், மசூதிகளே சம்பளம் வழங்கலாமே? செய்யுமா திமுக அரசு? இல்லை கோவில் தான் இழிச்சவாய்தனமா?
Rate this:
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
24-செப்-202112:08:00 IST Report Abuse
Bharathiஅப்படியெல்லாம் செஞ்சா அவங்க சபையிலே கட்டளை போட்டுடுவாங்க. வற்ர எலக்ஷன்ல இவங்களுக்கு பிச்சை podakoodaathunnu...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X