தனியார் துப்பறியும் நிபுணர்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வழிகாட்டுதல்: ஐகோர்ட் உத்தரவு

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021
Share
Advertisement
புதுடில்லி : தனியார் துப்பறியும் நிபுணர்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த, வழிகாட்டுதல்கள் வகுக்க கோரிய மனு மீது மத்திய அரசு பதில் அளிக்குமாறு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.'தனியார் துப்பறியும் நிபுணர்கள் வழக்கு விசாரணை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தனி நபர்களின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படுகின்றன. எனவே, அவர்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும்
Delhi HC, High Court,detective,ஐகோர்ட்

புதுடில்லி : தனியார் துப்பறியும் நிபுணர்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த, வழிகாட்டுதல்கள் வகுக்க கோரிய மனு மீது மத்திய அரசு பதில் அளிக்குமாறு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

'தனியார் துப்பறியும் நிபுணர்கள் வழக்கு விசாரணை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தனி நபர்களின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படுகின்றன. எனவே, அவர்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் விதமாக, வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுக்க வேண்டும்' என, கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news


மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: என் கட்சிக்காரரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக சட்ட விரோதமாக விசாரணை நடத்திய தனியார் துப்பறியும் நிபுணர், அதுபற்றிய தகவல்களை வெளிநாட்டை சேர்ந்த நபருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.நாட்டில் பல தனியார் துப்பறியும் நிபுணர்கள் எந்த மேற்பார்வையும் இன்றி செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X