பயங்கரவாதிகளுக்கு உதவிய 6 அரசு அதிகாரிகள் பணி நீக்கம்!

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவி வரும் அரசு அதிகாரிகள் களையெடுக்கப்பட்டு வருகின்றனர்.இந்தவகையில், அரசு கல்லுாரி ஆசிரியர்கள் அப்துல் ஹமீத் வானி, லியாகத் அலி கக்ரூ, இளநிலை உதவியாளர் முகமது ரபி பட், வனத் துறை அதிகாரி தாரிக் மகமூத் கோலி, போலீஸ் கான்ஸ்டபிள்கள் ஷவுகத் அகமது கான், ஜாபர் உசேன் பட் ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் பணி
Jammu and Kashmir, sacked, six employees, terror links

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவி வரும் அரசு அதிகாரிகள் களையெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தவகையில், அரசு கல்லுாரி ஆசிரியர்கள் அப்துல் ஹமீத் வானி, லியாகத் அலி கக்ரூ, இளநிலை உதவியாளர் முகமது ரபி பட், வனத் துறை அதிகாரி தாரிக் மகமூத் கோலி, போலீஸ் கான்ஸ்டபிள்கள் ஷவுகத் அகமது கான், ஜாபர் உசேன் பட் ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. 'அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதால் ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.அப்துல் ஹமீது வானி, ஆசிரியர் பணியில் சேரும் முன் 'அல்லா டைகர்ஸ்' என்ற பயங்கரவாத அமைப்பின் மாவட்ட தளபதியாக இருந்துள்ளார்.


latest tamil news


இவர், தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி பயங்கரவாத அமைப்பின் உதவியால், எந்தவித தேர்வுமின்றி அரசு பணியில் சேர்ந்துள்ளார். லியாகத் அலி கக்ரூ, பயங்கரவாத பயிற்சி பெற்றதற்காக, 2001ல் கைது செய்யப்பட்டவர்.

தாரிக் முகமது கோரி மீது, பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், வெடி மருந்துகள், கள்ள நோட்டு சப்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. எம்.எல்.சி., வீட்டில் துப்பாக்கிகளை திருடியதாக போலீஸ் கான்ஸ்டபிள் ஷவுகத் அகமது கான் மீது வழக்கு உள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் பாதுகாப்பாக வாகனங்களில் செல்ல ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில், ஜாபர் உசேன் பட், முகமது ரபி பட் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும், அரசு பணிகளில் இருந்தபடி பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்ந்து உதவி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
23-செப்-202113:21:24 IST Report Abuse
elakkumanan தீவிரவாதிகளுக்கு உதவியவர் அரசு ஊழியர் என்றால் மட்டும்தான் நடவடிக்கையா? பொதுமக்களில் யாராக இருந்தாலும், தீவிரவாதிகளுக்கு உதவுவது தப்பென்றால், எங்க ஊரில், சொந்த பெயரில்லாமல் ஒரு கும்பல் , மேற்படி பணியை செய்து வருகின்றன... அதெல்லாம் கவனிக்கப்படுமா? ஸ்டெரிலைட் மூடுவதர்க்கே வெளிநாட்டு காசு வாங்கிய கும்பல் இன்னும் பிரியா உலாத்துறானுவோ.. என்னையா கவனிக்கிறீங்க.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
23-செப்-202110:43:18 IST Report Abuse
RajanRajan இவிங்க சார்ந்த விஷயத்தை கறந்து விட்டு பயங்கரவாதிங்க பாணியில் என்கவுன்டர் பண்ணி விட வேண்டும். ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
23-செப்-202110:07:56 IST Report Abuse
jayvee அப்படியே தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து மற்றும் ஆதரவாக செயல்படும் அரசியல் வாதிகளை பதவி நீக்கம் செய்து அவர்கள் நடத்தும் அல்லது சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகளை முடக்கினால் நாடு பாதுகாப்பாக இருக்கும். மேலும் தீவிரவாத கருத்துகளுக்கு உடன்பட்டு அதை ஆதரிக்கும் வகையில் செய்திகள் வெளியிடும் ஊடகம் மீடியாக்களை வாழ்நாள் தடை செய்து விட வழி செய்யவேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X