பொது செய்தி

இந்தியா

வருமான வரி 'ரீபண்டு' பெயரில் திருடப்படும் வங்கி விபரங்கள்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : 'வருமான வரி 'ரீபண்டு' என்ற பெயரில் அலைபேசி செய்தி அனுப்பி வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்டவை திருடப்படுகிறது' என சைபர் குற்றங்களை தடுக்கும் 'செர்ட்இன்' அமைப்பு எச்சரித்துள்ளது.சைபர் குற்றங்களை தடுக்கவும் கண்காணிக்கவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது செர்ட்இன் என்ற அமைப்பு. சைபர் மோசடிகள் குறித்து இந்த அமைப்பு எச்சரிக்கை விடுக்கும்.

புதுடில்லி : 'வருமான வரி 'ரீபண்டு' என்ற பெயரில் அலைபேசி செய்தி அனுப்பி வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்டவை திருடப்படுகிறது' என சைபர் குற்றங்களை தடுக்கும் 'செர்ட்இன்' அமைப்பு எச்சரித்துள்ளது.



latest tamil news



சைபர் குற்றங்களை தடுக்கவும் கண்காணிக்கவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது செர்ட்இன் என்ற அமைப்பு. சைபர் மோசடிகள் குறித்து இந்த அமைப்பு எச்சரிக்கை விடுக்கும். அதன்படி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்களை திருடும் இணையத் திருடர்கள் தற்போது புதிய வழியை பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட நபரின் அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள்.

அதில் வருமான வரி 'ரீபண்டு' செய்யப்படுவதாகக் கூறப்படும். அந்த செய்தியில் குறிப்பிட்ட இணையதள இணைப்புக்குள் நுழையும்படி கூறுவர்.அவ்வாறு நுழையும்போது புதிதாக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்படி கூறுவர். வருமான வரித் துறையின் இணையதளம் போலவே இந்த இணைய தளமும் செயலியும் இருக்கும்.அதில் பான்கார்டு எண் வங்கி கணக்கு எண் உள்பட தகவல்களை பதிவிடும்படி கூறுவர். அவ்வாறு பதிவு செய்ததும் அந்தத் தகவல்களை இணையத் திருடர்கள் திருடி விடுவர்.


latest tamil news



அந்தத் தகவல்கள் வைத்து பயனாளியின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடுவர்.நாடு முழுதும் 27 பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் இந்த மோசடி ஏற்கனவே துவங்கிவிட்டது. அதனால் இதுபோன்ற செய்தி வரும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செய்தியுடன் இடம்பெறும் இணையதள இணைப்புகளை எப்போதும் பயன்படுத்தக் கூடாது. இதுவே மோசடிகளை தடுக்க உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
23-செப்-202113:14:28 IST Report Abuse
sridhar மொபைல் மட்டுமே பண பரிவர்த்தனையில் அடையாளம் என்ற நிலை தவறு. மொபைல் திருடு போனால் பணம் திருடப்படும் . பயோமெட்ரிக் முறை பண பரிவர்தனையே சரி . ஆர்பிஐ ஆவன செய்யவேண்டும்.
Rate this:
Cancel
Thiyaga Rajan - Chennai,இந்தியா
23-செப்-202111:16:59 IST Report Abuse
Thiyaga Rajan எப்படி இருந்தாலும் பணமாக பெறாமல் வாங்கி கணக்கு மூலமாக தான் அவர்கள் திருடுகிறார்கள் .... அப்படி இருக்கையில் அந்த வாங்கி கணக்கு கொண்ட பயனாளி யார் என்பதையும் அவருக்கு இது போல போலி கணக்கு ஆரம்பிக்க உதவிய அதிகாரியையும் ஏன் இதுவரை பிடிக்க வில்லை ??? அரசாங்கமே இதற்கு துணை போகின்றதா ?? திருடுபவனின் வாங்கிக்கணக்கை ஏன் முடக்கவில்லை ????? யார் அதன் பின் இருப்பவர்கள் ????????
Rate this:
Cancel
23-செப்-202109:26:07 IST Report Abuse
அப்புசாமி இப்பல்லாம் வங்கிகளே உருவுறாங்கோ... ரயில்வேயில் ரீஃபண்ட் தரும் போது அநியாயத்துக்கு உருவறாங்கோ... இதெல்லாம் ஒன்றிய அரசால் ஆசீர்வதிக்கப் பட்ட உருவல்கள். இதில் சைபர் கிரிமினல்கள் உருவுனாத்தான் தப்போ? எல்லாம் ஆத்தோட போற தண்ணி... ஐயா குடி.. அம்மா குடி.. தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X