பொது செய்தி

இந்தியா

வரைவுக்குழுவுக்கு தலைமை ஏற்பதை கவுரமாக கருதுகிறேன்: கஸ்தூரி ரங்கன் நெகிழ்ச்சி

Added : செப் 23, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
பெங்களூரு: புதிய கல்விக் கொள்கையின் கீழ், பாடத் திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கஸ்துாரி ரங்கன், தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை கவுரவமாக கருதுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.ஒப்புதல்கடந்த 2020-ம் ஆண்டிற்கான புதிய கல்விக் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது.இந்த புதிய கல்விக்
Kasturirangan, new curriculum framework, NCFs, Kasturirangan Committee

பெங்களூரு: புதிய கல்விக் கொள்கையின் கீழ், பாடத் திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கஸ்துாரி ரங்கன், தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை கவுரவமாக கருதுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


ஒப்புதல்


கடந்த 2020-ம் ஆண்டிற்கான புதிய கல்விக் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது.இந்த புதிய கல்விக் கொள்கையின்கீழ், பள்ளிக் கல்விக்கான புதிய பாடத் திட்டத்தை உருவாக்க, கஸ்துாரி ரங்கன் தலைமையில் 12 பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவை அமைத்து, மத்திய கல்வித் துறை அறிவித்தது.

இக்குழுவினர், குழந்தைப் பருவக் கல்வி, பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத் திட்டத்தை வடிவமைக்க உள்ளனர். இக்குழுவில், ஜாமியா மில்லியா இஸ்லாமியபல்கலை துணைவேந்தர் நஜ்மா அக்தர், பஞ்சாப் மத்திய பல்கலை வேந்தர் ஜக்பீர் சிங், ஆந்திராவின் மத்திய பழங்குடியின பல்கலை வேந்தர் கட்டிமணி, ஜம்மு ஐ.ஐ.எம்., தலைவர் மிலிந்த் காம்ப்லே ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.


latest tamil news
காத்திருக்கிறேன்


இந்நிலையில், குழுவுக்கு தலைமை தாங்கும் கஸ்துாரி ரங்கன் கூறியதாவது: மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள இந்த பணியை, மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும், கல்வி, பயிற்சி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நன்கு அறிந்தவர்களாக உள்ளனர்; அனைவரும் மிகவும் திறமையான கல்வியாளர்கள்.

அவர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதை பாக்கியமாக கருதுகிறேன். அவர்களுடன் பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
23-செப்-202115:04:17 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN நமது நாட்டின் கல்வி தரத்தை உயர்த்த மத்திய மோடி அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. திரு.கஸ்தூரி ரங்கன் போன்ற அனுபவம் வாய்ந்த அறிவு ஜீவிகளை கொண்டு தரமான கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வழி செய்கிறது. தமிழக மாணவர்கள் கல்வியுடன் பல மொழிகளை பயின்று தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆனால் தமிழகத்துக்கு கஸ்தூரி ரங்கன் போன்ற விஞ்ஞானிகள் தேவையில்லை லியோனி போன்ற மூன்றாம் தர ஆபாச பேச்சாளர்கள் தான் கல்வித் துறைக்கு தேவை என திராவிட திமுகவின் ஸ்டாலின் அரசு நினைக்கிறது இது தான் ஆளும் திமுக அரசின் தரம். தமிழகத்திற்கு புதிய கல்விக் திட்டம் உடனடி தேவை. வாழ்க தமிழ் வளர்க பாரத ஒற்றுமை.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
23-செப்-202114:10:07 IST Report Abuse
Tamilnesan திரைப்பட நடிகர் மயில்சாமி, தமிழன் பிரசன்னா போன்ற சான்றோர்கள் இந்த பணிக்கு பொருத்தமானவர்கள்........ஹா....ஹா...... எப்படி இருந்த நான் (தமிழ்நாடு), இப்படி ஆயிட்டேன்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
24-செப்-202110:51:25 IST Report Abuse
கல்யாணராமன் சு.அனாவசியமா, தமிழன் பிரசன்னா கூட ஒப்பிட்டு மயில்சாமியை இன்சல்ட் பண்ணாதீங்க.... ஒப்பிடும்போது, மயில்சாமி நல்லவர், அறிவாளி .........
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
23-செப்-202113:33:46 IST Report Abuse
Arul Narayanan குழ உறுப்பினர்கள் எல்லோரும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள். ஏற்கனவே இவர்களைப் போன்றவர்கள் தயாரித்த பாடங்களைப் படிக்க முடியாமல் இளஞ்சிறார்கள் துண்பப் படுவதை ஒரு சமூக அறிவியல் ஆசிரியனாக கண்டு வேதனைப் பட வேண்டியுள்ளது. தாங்கள் பல்கலைக்கழகத்தில் கற்பிக்க வேண்டியதை எல்லாம் பதின்ம வயது பாலகர்களிடம் திணிக்க முயற்சிக்கிறார்கள். பள்ளி ஆசிரியர்களுக்குத்தான் சராசரி பள்ளிக் குழந்தைகளின் புரிதல் திறன் தெரியும்.புதிய குழு புதிய பாணியில் திணிப்பு செய்யும். இந்தக் குழுவிற்கு பதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறந்த பள்ளி ஆசிரியர்களையும் பள்ளிக் கல்வி வல்லுனர்களையும் கொண்ட குழு அமைக்கலாம்.
Rate this:
23-செப்-202115:49:11 IST Report Abuse
ஆரூர் ரங்உலகம் முழுவதும் போட்டி அதிகமாக உள்ள இக்காலத்தில் பாடமுறை🤫 அதிகமாகதானே இருக்கும்? .படிக்க இயலாதவர்கள் பரம்பரைத் தொழில்🙏 செய்யலாம். எந்தத் தொழிலும் கேவலமில்லை . எல்லோரும் பல்லக்கில் ஏறினால் தூக்குவது யார்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X