பொது செய்தி

இந்தியா

டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 300 நாட்களை கடந்தது

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நேற்று 300வது நாளை நிறைவு செய்தது.புதிய வேளாண் சட்டங்களை பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாய சங்கத்தினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி டில்லியின் எல்லையில் அவர்கள் நடத்தும் தொடர் போராட்டம் நேற்றுடன் 300 நாட்களை நிறைவு செய்துள்ளது.போராட்டத்தை
Formers Protest, 300 days, farm laws

புதுடில்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நேற்று 300வது நாளை நிறைவு செய்தது.

புதிய வேளாண் சட்டங்களை பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாய சங்கத்தினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி டில்லியின் எல்லையில் அவர்கள் நடத்தும் தொடர் போராட்டம் நேற்றுடன் 300 நாட்களை நிறைவு செய்துள்ளது.


latest tamil news



போராட்டத்தை வழிநடத்தும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் அறிக்கை: டில்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியான முறையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரும் இந்த அறப்போர் 300 நாட்களை கடந்துள்ளது.

எங்கள் கோரிக்கைகள் மத்திய அரசுக்கு தெளிவாக தெரிந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எனவே ஏற்கும் வரை போராட்டம் தொடரும். எங்கள் தரப்பில் வரும் 27ம் தேதி 'பாரத் பந்த்' நடத்த அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
23-செப்-202116:44:24 IST Report Abuse
DVRR கனடாவின் காலிஸ்தான் "வேலைக்கு ஆள் தேவை" விளம்பரம். உட்கார்ந்த இடத்தில் உங்களுக்கு வேளாவேளைக்கு சாப்பாடு குத்தாட்டம் ஹூக்கா இன்னும் என்ன என்னவோ நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான் கோடி தூக்கி வேண்டும் நாங்கள் சொல்வதை உரக்க சொல்லவேண்டும். இதற்கு தினசம்பளம் எவ்வளவு நாட்கள் நடக்கின்றதோ அவ்வளவு நாட்களும் சம்பளம். நீங்கள் தங்களை விவசாயி என்று சொல்லிக்கொள்ளவேண்டும். அச்சு அசலாக அப்படியே நடக்கின்றது. இவர்கள் 1) விவசாயிகள் அல்லவே அல்ல 2) வேளாண் சட்டம் என்றால் என்னவென்றே இவர்களுக்கு முதலில் தெரியாது 3) இவர்கள் இடை தரகர்கள் அல்லது இடை தரகர்களால் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள பணி அமர்த்தப்பட்டவர்கள். இது இவர்களுக்கு ஒரு தொழில் அவ்வளவு தான்
Rate this:
Cancel
23-செப்-202115:44:39 IST Report Abuse
ஆரூர் ரங் பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் முடியும்😉😉 வரை இந்த போராட்ட நாடகம் தொடரும்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
23-செப்-202114:17:42 IST Report Abuse
Vena Suna பணக்கார விவசாயிங்க ஏழை விவசாயிகளை ஒழிக்க முடியாது. இந்த சட்டங்கள் இருக்க தான் செய்யும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X