மிகப் பெரிய அளவில் மதமாற்ற நடவடிக்கை; உ.பி.,யில் மதகுரு கைது

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (74)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில், மிகப் பெரிய அளவில் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட முஸ்லிம் மதகுரு மவுலானா கலீம் சித்திக் என்பவரை, பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.கடந்த ஜூனில், டில்லி ஜாமியா நகரை சேர்ந்த முப்தி குவாஸி ஜஹாங்கிர் ஆலம் குவாஸ்மி மற்றும் முகமது உமர் கவுதம் ஆகியோரை, பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர். அவர்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான
Muzaffarnagar, conversion case, UP ATS, arrest, Islamic scholar, Maulana Kaleem Siddiqui, foreign funding

லக்னோ: உத்தர பிரதேசத்தில், மிகப் பெரிய அளவில் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட முஸ்லிம் மதகுரு மவுலானா கலீம் சித்திக் என்பவரை, பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜூனில், டில்லி ஜாமியா நகரை சேர்ந்த முப்தி குவாஸி ஜஹாங்கிர் ஆலம் குவாஸ்மி மற்றும் முகமது உமர் கவுதம் ஆகியோரை, பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர். அவர்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யிடம் இருந்து நிதி உதவி பெற்று, காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத மாணவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றும் மிகப் பெரிய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது விசாரணை யில் தெரியவந்தது.


latest tamil newsஇவர்களுக்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த அல் - பல்லா அறக்கட்டளையில் இருந்து 57 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டதும் தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.இந்த வரிசையில், உ.பி.,யின் மீரட்டை சேர்ந்த மதகுரு மவுலானா கலீம் சித்திக் என்பவரை பயங்கரவாத தடுப்பு படை கைது செய்தது.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், பயங்கரவாத தடுப்பு படை தலைமையகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் சித்திக் பல்வேறு கல்வி, சமூக, ஆன்மிக அமைப்புகளின் பேரில், மிகப் பெரிய மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த சட்ட விரோத மதமாற்றத்துக்கு மிகப் பெரிய அளவில் வெளிநாட்டு நிதியும் வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
24-செப்-202100:08:34 IST Report Abuse
Aarkay அப்படியே கொஞ்சம் இந்தப்பக்கமும் கவனியுங்கள். இங்கே மதம் மாறிய எவரும், தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்வதில்லை.
Rate this:
Cancel
23-செப்-202121:15:26 IST Report Abuse
அப்புசாமி அடப்பாவிங்களா... உங்க மத மாற்றத்துக்கு கை, கால் ஊனமானவங்க, காது கேக்காதவங்க, வாய் பேசாத்வங்களா கிடைச்சாங்க? குறிவெச்சு தாக்குறதுக்குத்தான் லண்டனிலிருந்து பணம் வாங்குனீங்களா? நல்லா வருவீங்கடா...
Rate this:
Cancel
23-செப்-202120:19:08 IST Report Abuse
Balaji Radhakrishnan இவனை ஜாமீனில் விடக்கூடாது. இவனை வைத்து மற்றவர்களையும் பிடித்து இவர்கள் ஆயுள் முழுவதும் வெளியே வரமுடியாத கடும் தண்டனை வழங்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X