பொது செய்தி

இந்தியா

அதிகாரத்தில் உள்ளோருக்கு ஆதரவாக ராஜன் கமிட்டி அறிக்கை; கல்வியாளர் பாலகுருசாமி

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (98)
Share
Advertisement
சென்னை : 'அதிகாரத்தில் உள்ளோரின் விருப்பத்துக்கு ஏற்ப, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் கமிட்டி, நீட் தேர்வு தொடர்பான அறிக்கையை தயாரித்துள்ளது' என, கல்வியாளர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் கமிட்டியின் அறிக்கை, சமீபத்தில் வெளியானது. அதன் அம்சங்கள் குறித்து, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்ட

சென்னை : 'அதிகாரத்தில் உள்ளோரின் விருப்பத்துக்கு ஏற்ப, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் கமிட்டி, நீட் தேர்வு தொடர்பான அறிக்கையை தயாரித்துள்ளது' என, கல்வியாளர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.



latest tamil news


தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் கமிட்டியின் அறிக்கை, சமீபத்தில் வெளியானது. அதன் அம்சங்கள் குறித்து, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்ட அறிக்கை:ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை, ஏற்ற இறக்கமான புள்ளி விபரங்களின் அடிப்படையில் உருவான, பாரபட்சமான அறிக்கையாக தெரிகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பத்துக்கும், அவர்களின் எண்ணங்களுக்கும் ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.நீட் தேர்வு தொடர்பாக, முதலில் பரிந்துரைகளை எழுதி விட்டு, அதற்கு ஆதரவாக அறிக்கையை உருவாக்கியுள்ளது போல் தெரிகிறது.

அறிக்கையில் பல்வேறு ஆச்சர்யத்தக்க விஷயங்கள் உள்ளன.அதாவது, 'மாநிலங்கள் நடத்தும் கல்லுாரிகளுக்கு, மத்திய அரசால், நுழைவு தேர்வை நடத்த முடியாது. பல்கலைகளை உருவாக்க, மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.'நிகர்நிலை பல்கலைகளை கட்டுப்பாட்டில் எடுக்க மாநில அரசு சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும்' என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பலன்கள் புரியவில்லை

'நீட் தேர்வு இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், தமிழக சுகாதாரத்துறை மிக மோசமாக பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். தமிழகம் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்துக்கு செல்லலாம்' என, நகைப்புக்குரிய கருத்தும் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த கமிட்டியானது நீட் தேர்வின் முக்கியத்துவம், அதனால் மாணவர்களுக்கும், பொதுமக்களும் கிடைக்கும் பலன்கள் குறித்து புரிந்து கொள்ளவில்லை என, இதில் இருந்தே தெரிகிறது. நீட் தேர்வால் ஏற்படும் பலன்களை, ராஜன் கமிட்டி எடுத்துக்காட்ட தவறிவிட்டது. மேலும், ராஜன் கமிட்டி அறிக்கையில், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பல்வேறு பாட திட்டத்தில் மாணவர்கள் படித்து வரும் நிலையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களை சேர்ப்பது எப்படி பொதுவானதாக இருக்கும். பல பாட திட்ட மாணவர்களுக்கு பொதுவான தேர்வு நடத்துவதே சரியானது.


பல தேர்வுகளுக்கு முற்றுப்புள்ளி

நீட் தேர்வு வரும் முன், பல்வேறு மாநிலங்களும், மத்திய கல்வி நிறுவனங்களும், நிகர்நிலை பல்கலைகளும் தனித்தனியாக நுழைவு தேர்வுகள் நடத்தின. நீட் தேர்வு வந்த பின், எல்லாம் ரத்து செய்யப்பட்டு, ஒரே தேர்வாக மாறியுள்ளது.நீட் தேர்வின் மதிப்பெண்ணை கொண்டு, எல்லா மருத்துவ கல்லுாரிகளுக்கும் மாணவர் சேர்க்கை பெற முடிகிறது.

இதன் காரணமாக, பல்வேறு நிறுவன நுழைவு தேர்வுக்காக தனித்தனியே பயிற்சி எடுப்பது, கட்டணம் செலுத்துவது, நேரத்தை செலவிடுவதும் குறைந்துள்ளதோடு, மாணவர்களுக்கான அழுத்தமும், கவலையும் குறைந்துள்ளது. நியாயமான, வெளிப்படையான அணுகுமுறையை நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசின் மருத்துவ கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டை தவிர மற்ற இடங்கள் அனைத்தும், தமிழக மாணவர்களுக்கே கிடைக்கிறது.நீட் மதிப்பெண்ணை பயன்படுத்தி, மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மாநில கல்வி நிறுவனங்களிலும் மருத்துவ படிப்பில் சேர முடிகிறது. வெளிநாட்டு மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் சேர முடிகிறது.


ஊழல் ஒழிந்தது

சில தனியார் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர்களிடம் மறைமுகமாக நன்கொடை வசூலித்து, மருத்துவ சேர்க்கை வழங்கும் நடைமுறை இருந்தது. இதற்கு நீட் தேர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வின் வழியே, இந்திய மருத்துவ படிப்புக்கு, சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைக்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அகில இந்திய ஒதுக்கீட்டில், 27 சதவீதம் மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும்; 10 சதவீதம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் சேர்க்கை வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால், ஏராளமான ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பலன் அடைவர்.எனவே, ஒரு சார்பான அறிக்கையின்படி, தமிழக அரசு நீட் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றியிருப்பது துரதிர்ஷ்ட வசமானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
23-செப்-202116:55:59 IST Report Abuse
Indhuindian காசு கொடுத்து முட்டாளாக இருந்தாலும் சீட்டை வாங்கி அஞ்சு ஆறு வருஷம் பெஞ்ச தேச்சு அப்புறம் அரசாங்க ஆஸ்பத்திரியில் வைத்தியம் பாக்கறேன்னு என்னவேனா பண்ணலாம். அப்படி கொடுக்கற காசெல்லாம் யாருக்கு போவுது அந்த முட்டாளுக்கு அட்மிஷன் குடுக்கற கல்வி தந்தை என்ற பண முதலைக்கு. இப்படி ஓரிடத்து காசு இன்னோரிடத்துக்கு போவதுதான் திராவிட சமூக நீதி
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
23-செப்-202116:13:33 IST Report Abuse
DVRR நீட் என்பதே என்னவென்று புரியாத அறிவிலிகள் கருத்து அபாரமோ அபாரம். அறிவிலிகளே 1) நீட் என்பது ஒரு பரீட்சை அதில் மிக அதிக மார்க்குகள் வாங்கினவர்களுக்கு மருத்துவ சீட் அவ்வளவே. 2) இதில் அகோரமாக படு மோசமாக அடிபட்டது மருத்துவக்கல்லூரி உரிமையாளர்கள் அதாவது திமுக அதிமுக அரசியல்வாதிகள். முன்பு நடந்தது நீட்டுக்கு முன். ஏதோ பள்ளி இறுதியில் கொஞ்சம் பாஸ் மார்க் வாங்கு ரூ 1 கோடி கொடு எங்கள் மேனேஜ்மென்ட் சீட் உனக்கு உறுதி. ஆனால் இன்று என்ன விதி மத்திய அரசு செய்தது. நீட் தேர்வில் கட் ஆப் மார்க்குக்கு அதிகமாக எடுத்தும் சீட் கிடைக்காவிடில் மேனேஜ்மென்ட் சீட் (முன்பு மொத்த மருத்துவ கல்லூரி சீட்டும் கல்லூரி உரிமையாளர்களின் கையில்) 8% முதல் 10% சதவிகிதம் மொத்த கல்லூரியின் சீட்டில் அதாவது 100 சீட் என்றால் நீட்டுக்கு முன் இப்போது வெறும் 8 முதல் 10 சீட் மட்டும் தான். ஒரு சீட்டுக்கு ரூ 12 லட்சம் தான் மாணவர்கள் கொடுக்கவேண்டும் அதுவும் நீட் கட் ஆப்புக்கும் மேலிருந்தால் மட்டுமே இல்லையென்றால் சீட் இல்லை நீட்டுக்கு முன் வருமானம் இவர்களுடையது 100 சீட் கல்லூரியில். 25 சீட் ரூ 25 கோடி + 25 சீட் ரூ 12.50 கோடி + 25 சீட் ரூ 6.25 கோடி + 25 சீட் ரூ 2.50 கோடி = ரூ 46.25 கோடி ஆனால் இன்று கிடப்பது 8 சீட் ரூ 96 லட்சம்????ஏன் இந்த கொள்ளையர்கள் வருத்தப்படமாட்டார்கள் கோபப்படமாட்டார்கள் அதுவும் அரசியலில் இவ்வளவு நஷ்டம்???ஆகவே தான் நீட் எதிர்ப்பு இதை புரியாமல் நீட்டுக்கு எதிர்ப்பு குரல் எழுப்பிக்கொண்டே உளறிக்கொண்டே இருக்காதீர்கள் குழந்தை செல்வங்களே
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
23-செப்-202116:09:47 IST Report Abuse
Sandru அதிகாரத்தில் உள்ளோருக்கு ஆதரவாக ராஜன் கமிட்டி அறிக்கை- என்று ஒன்றிய அரசுக்கு ஆதரவாக பாலகுரு கூவுகிறார்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
24-செப்-202112:01:14 IST Report Abuse
கல்யாணராமன் சு.@Sandru, அவர் சொல்றது இருக்கட்டும் ........... நீங்க என்ன சொல்றீங்க ? இந்த அறிக்கை விடியல் அரசின் ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டுக்கு ஆதரவா இருக்கா இல்லியா ? அதை சொல்லுங்க ?? இந்த அறிக்கையை அலசிப்பார்த்து, ஆராய்ந்து சொன்ன கருத்துக்கள் எல்லாமே ஒன்றிய அரசின் ஆதரவாளர்களால் போடப்படவில்லை என்பது தங்களுக்கு தெரியுமா, தெரியாதா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X