கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகை: அறநிலையத்துறை கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, வாடகை மறு நிர்ணயத்தை உறுதி செய்யவும், அறநிலையத்துறை கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'நோட்டீஸ்'ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பெருந்துறையில் உள்ள
கோவில், சொத்துக்கள்,வாடகை, அறநிலையத்துறை, கமிஷனர், ஐகோர்ட், உத்தரவு

சென்னை: கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, வாடகை மறு நிர்ணயத்தை உறுதி செய்யவும், அறநிலையத்துறை கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



'நோட்டீஸ்'



ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பெருந்துறையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 4.02 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று, 1982ல் பள்ளி துவங்கப்பட்டது. குத்தகை நிலம் தவிர்த்து, கூடுதலாக 2.50 ஏக்கர் நிலத்தையும் விளையாட்டு மைதான மாக பயன்படுத்தி வருகிறது.

குத்தகை நிலத்துக்கும், கூடுதலாக பயன்படுத்தும் நிலத்துக்கும், வாடகை நிர்ணயம் தொடர்பாக, கோவில் நிர்வாக அதிகாரி, பள்ளி நிர்வாகத்துக்கு, 2018 ஜூலையில், 'நோட்டீஸ்' அனுப்பினார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், 'நியாயமான வாடகையை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. தற்போது, மாத வாடகையாக, 85 ஆயிரத்து, 796 ரூபாய் செலுத்துகிறோம்.


நிலுவை


'வாடகை நிர்ணயம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் கையாண்ட முறையை எதிர்த்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மீண்டும் வாடகை நிர்ணயம் செய்வதை ஏற்க முடியாது' என, கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அறநிலையத்துறை சார்பில், வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜரானார்.



latest tamil news



நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோவில் சொத்துக்கள் தொடர்பான வாடகையை, அறநிலையத் துறை சட்டப்படி அமைக்கப்பட்ட குழு தான் நிர்ணயிக்க வேண்டும். சொத்து இருக்கும் பகுதியில் நிலவும் சந்தை மதிப்பை ஆராய்ந்து, நியாயமான வாடகையை குழு நிர்ணயிக்கும். எனவே, இந்தக் குழு நிர்ணயிக்கும் வாடகை தான் செல்லத்தக்கது. நிர்வாக அதிகாரி அல்லது அறங்காவலர்கள் நிர்ணயித்த வாடகையால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர், அதை எதிர்த்து, அறநிலையத்துறை கமிஷனரிடம் மேல்முறையீடு செய்யலாம். சட்ட நடைமுறையை பின்பற்றி, வாடகையை நிர்ணயிக்க, நில உரிமையாளருக்கு உரிமை உள்ளது. அதன்படி வாடகை நிர்ணயித்து நோட்டீஸ் அனுப்பினால், அதுகுறித்த ஆட்சேபனையை சமர்ப்பிக்க, வாடகைதாரருக்கு உரிமை உள்ளது.




ஆட்சேபனை



இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரர் தரப்பில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டியதுள்ளது. அதிகாரிகள் இறுதி உத்தரவு பிறப்பித்த பின், அந்த உத்தரவால் மனுதாரர் பாதிக்கப்பட்டதாக கருதினால், கமிஷனரை அணுகலாம். நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், நீதிமன்றத்தை மனுதாரர் அணுகி உள்ளார். இதை ஏற்க முடியாது.எனவே, மனுதாரர் தெரிவித்த ஆட்சேபனைகளை பரிசீலித்து, தகுதி அடிப்படையில் இறுதி உத்தரவை, எட்டு வாரங்களில் பிறப்பிக்க வேண்டும். நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையை, அறநிலையத்துறை கமிஷனர் பிறப்பிக்க வேண்டும். வாடகை மறு நிர்ணயம்; கூடுதல் வாடகையை, மூன்று ஆண்டு களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்வதை, கமிஷனர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
24-செப்-202113:40:04 IST Report Abuse
கல்யாணராமன் சு. கோவில் நிலங்களுக்கு வாடகை நிர்ணயிக்கும்போது, எதற்காக அந்த இடம் பயன்படப்போகிறது என்பதையும் கவனித்து வாடகை நிர்ணயிக்கவேண்டும் .......... பள்ளியை நடத்தும் நிறுவனம் மாணவர்களிடம் என்ன கட்டணம் வசூலிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் ....... 6.52 ஏக்கர் நிலத்திற்கு மாதம் 87 ஆயிரம் வாடகை என்பது பள்ளியில் மாணவர் கட்டணம் எவ்வளவு என்பதை பொறுத்து அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக் கூடும் ......
Rate this:
Cancel
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
23-செப்-202113:31:26 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் உண்மை எல்ல கோயில் வீடுகளில் ஐயர் கல் சொற்ப வாடகையில் உள்ளனர் , இப்போ தான் அந்த வீடுகளின் முகப்பில் :: இது கோயில் இடம் இதை விற்கவாளோ வாங்கவோ கூடாது என்று போர்டு"" உள்ளது , எல்லா வீடுகளுக்கும் ஐயர் கொடுப்பது 500 க்கு கீழே தான் வாடகை , அவர் தாத்தா அன்று 2 ரூபாய் க்கு வந்தார் என்றால் இன்னமும் அது தொடர்கிறது அது அவர் பூர்வீக வீடு மாதிரி வேறு யாரும் போகமுடியாது , இதை எல்லாம் மாற்றனும் , கலிகாலத்திற்கு ஏற்ற வாடகை போடு வசூலிக்கநும்
Rate this:
Jothi - Singapore,சிங்கப்பூர்
23-செப்-202116:51:35 IST Report Abuse
Jothiஅவங்க சம்பளம் எவ்வளவு? அத சொல்லாம இருப்பது ஏன்? தி மு க ஊடகம் மாதிரியே பாதி மறச்சு பாதி பேசுறது......
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
24-செப்-202113:34:08 IST Report Abuse
கல்யாணராமன் சு.இங்கே பேசப்படுவது, ஒரு நிறுவனம் 1982 லிருந்து கோவில் நிலத்தில் பள்ளி நடத்தி பணம் சம்பாதிப்பது பற்றி ....... ரிஷிகேஷ் சொல்வது ஐயர்களை பற்றி இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை ...... ஒருவேளை முரசொலி, ஓசி குவார்ட்டர், பிரியாணி, உபி சம்பந்தப்பட்டதா இருக்குமோ ??...
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
23-செப்-202112:57:57 IST Report Abuse
M S RAGHUNATHAN உயர் நீதிமன்றம் நேர்மையான வக்கீல்கள் வக்கீல்கள் கொண்ட ஒரு குழுவை ஏற்பாடு செய்து அவர்கள் மூலம் கோயில் சொத்துகள் வாடகைக்கு விடும்போது சந்தை மதிப்பில் உள்ளதா என்று சான்று அளித்ததால் மட்டுமே விடவேண்டும் என்று உத்தரவிட வேண்டும். ஒப்பந்தத்தில் கூறியபடி வாடகையை செலுத்தாவிடில் ஒப்பந்தத்தை ரத்து செய்து, சிவில், மற்றும் கிரிமினல் வழக்கு தொடர அந்த குழுவிற்கு அதிகாரம் அளிக்கவேண்டும். அந்தக் குழுவில் இருக்கும் வக்கீல் நடுநிலை தவறி நடந்தால் அவரின் சன்னத் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த தைரியம் உயர் நீதிமன்றத்துக்கு உண்டா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X