பொது செய்தி

தமிழ்நாடு

விண்வெளி செல்வதற்கும் வாகனம் உருவாகும்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை: ''விண்வெளி செல்வதற்கும் வாகனம் இனி வரும் காலத்தில் உருவாகும்'' என காந்தியை மாற்றிய தமிழ்நாடு என்ற தலைப்பில் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்த விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.விழாவில் கதராடை மற்றும் நுாலை தியாகி லட்சுமிகாந்தன் பாரதி வெளியிட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெற்றுக் கொண்டார்.பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது:
விண்வெளி செல்வதற்கும் வாகனம் உருவாகும்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை

மதுரை: ''விண்வெளி செல்வதற்கும் வாகனம் இனி வரும் காலத்தில் உருவாகும்'' என காந்தியை மாற்றிய தமிழ்நாடு என்ற தலைப்பில் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்த விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

விழாவில் கதராடை மற்றும் நுாலை தியாகி லட்சுமிகாந்தன் பாரதி வெளியிட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெற்றுக் கொண்டார்.பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது: செயற்கைகோள் தயாரிப்பு பணி என்பது நிறைய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி. ஊரடங்கால் இரண்டாண்டுகளாக இப்பணிகள் முழுமையாக நடக்கவில்லை. சந்திராயன் 1 விண்கலம் ஆயுள் முடிவதற்கு இரண்டாண்டுகள் உள்ளன. அதற்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் வெற்றி பெறுவோம். விமானத்தில் பயணிப்பதை போல விண்வெளி செல்வதற்கும் வாகனம் இனி வரும் காலத்தில் உருவாகும். அதை சுற்றுலாவுக்காக ஆராய்ச்சிக்காக பயன்படுத்தலாம்.


latest tamil news


இந்த விண்வெளி பயணம் எல்லோருக்கும் சாத்தியமாகும் வாய்ப்புகள் உள்ளன. செவ்வாயில் விவசாயம் செய்ய வாய்ப்புள்ளதா என ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஏற்கனவே தண்ணீர் இருப்பதால் அங்கிருந்து கார்பன் டை ஆக்சைடை பிரித்து அங்குள்ள மண்ணுக்கு ஏற்ற தாவரங்களை உருவாக்க முடியுமா என்பதை ஆராய்ந்து வருகிறோம். இங்கிருந்து செவ்வாய் கிரகம் செல்ல 9 மாதங்களாகிறது. அந்த பயண நாட்களில் தாவர உற்பத்தி செய்து சமைக்க முடிவதற்கான சாத்திய கூறுகளும் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
23-செப்-202113:04:32 IST Report Abuse
M  Ramachandran அதில் முதலில் ராவுளு வை அனுப்பிவையுங்கள். அவரை அங்கேயே விட்டு விட்டு வந்து விடுங்கள். இஙகு கொஞ்ச நாளைக்கு கொசு தொல்லையில்லாமல் மாக்கள் மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.
Rate this:
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
23-செப்-202114:40:20 IST Report Abuse
Yezdi K Damoகூரை ஏறி கோழி பிடிக்காதவன் ,வானம் ஏறி வைகுண்டம் போறானாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X