பொது செய்தி

இந்தியா

புடவையில் வந்த பெண்ணுக்கு உணவகம் அனுமதி மறுத்ததா?

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில், புடவை அணிந்த வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த உணவகத்திற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.டில்லியில், ஒரு தனியார் நட்சத்திர உணவகத்திற்கு, பெண் ஒருவர் புடவை அணிந்து சென்றுள்ளார். எனினும், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காத உணவக ஊழியர்கள், 'மேற்கத்திய உடையில் வந்தால் மட்டுமே, உணவகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்' என்றும் தெரிவித்துள்ளனர்.
Delhi Restaurant, Denied Entry, Women, Wearing Saree, டில்லி, உணவகம், பெண், சேலை, புடவை, அனுமதி மறுப்பு

புதுடில்லி: டில்லியில், புடவை அணிந்த வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த உணவகத்திற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டில்லியில், ஒரு தனியார் நட்சத்திர உணவகத்திற்கு, பெண் ஒருவர் புடவை அணிந்து சென்றுள்ளார். எனினும், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காத உணவக ஊழியர்கள், 'மேற்கத்திய உடையில் வந்தால் மட்டுமே, உணவகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்' என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து, ஊழியரிடம், அந்த பெண் உரையாடும் காட்சிகள் அடங்கிய, 'வீடியோ' ஒன்று, தற்போது வெளியாகி உள்ளது.


புடவையில் வந்தால் அனுமதி இல்லை ஸ்டார் ஓட்டல் அடாவடி

latest tamil news



அந்த வீடியோவில் பேசும் பெண், 'புடவையில் வந்தால், உணவகத்திற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லையா' என, கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலளித்த பெண் ஊழியர் ஒருவர், 'மேடம், மேற்கத்திய உடையில் வருவோருக்கு மட்டுமே நாங்கள் அனுமதி வழங்குகிறோம்; புடவையில் வருவோருக்கு அனுமதி இல்லை' என, பதில் அளித்துள்ளார்.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ, 'பேஸ்புக், டுவிட்டர், 'யுடியூப்' உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. 2.25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், இந்த வீடியோவை பார்த்து உள்ளனர். இதை பார்த்த பலரும், தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.


மறுப்பு


இந்நிலையில், அந்த உணவக நிர்வாகம் விளக்கம் ஒன்றையும் அது தொடர்பான வீடியோவையும் இப்போது வெளியிட்டுள்ளது. அதில், ‛அந்த பெண் உணவகம் வந்தபோது, முன்பே நீங்கள் இருக்கையை பதிவு செய்யவில்லை. கொஞ்சம் காத்திருங்கள் என்று அமைதியாகச் சொன்னோம். பிறகு அவரை எங்கு அமர வைப்பது என்று ஊழியர்கள் ஆலோசித்தார்கள். ஆனால் அதற்குள் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்த அப்பெண், எங்கள் ஊழியர்களுடன் சண்டை போட ஆரம்பித்தார். அதோடு மட்டுமில்லாமல் எங்கள் மேனேஜரையும் அவர் அறைந்தார்' என்று தெரிவித்துள்ளது. அவர் மேனேஜரை அறையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
27-செப்-202113:29:23 IST Report Abuse
Thiagarajan Kodandaraman வீட்டுல சமைக்காம வெளியில திரிஇர இது போன்ற ஆட்களுக்கு இன்னும் வேணும் .அடக்கமா இருக்கும் எந்த பெண்களும் அசிங்கப்படமாட்டார்கள்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
25-செப்-202110:35:26 IST Report Abuse
unmaitamil இது உண்மையா என்று தெரியவில்லை . பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு கிளப்புக்கு ஒரு வழக்கறிஞர் வேஷ்டியுடன் சென்றார் . அவர்கள் கிளப்பு நிபந்தனைப்படி வேஷ்டியுடன் நுழைய அனுமதி இல்லை என அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதைக்கேட்ட முதல்வர் ஜெயலலிதா வேஷ்டியை அனுமதிக்காத எந்த கிழப்போ, விடுதியோ தமிழகத்திற்கு தேவையில்லை, தடை செய்வேன் என்றார். எல்லாம் வழிக்கு வந்தன.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
25-செப்-202115:28:38 IST Report Abuse
 Muruga Velடாஸ்மாக் போயிட்டு வேஷ்டியும் கையுமா வந்தா வீட்டுக்குள்ளேயே அனுமதிக்க மாட்டாங்க...
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
23-செப்-202117:08:39 IST Report Abuse
DVRR மேலே ஏன் சிகப்பு கலரில் சேலை கருப்பு கலரில் சேலை??ஒரே நேரத்தில் ரெண்டு சேலை கட்டியிருந்தால்லா என்ன???இவள் ரெசெர்வ் செய்யாமல் சென்று பொருக்கச்சொன்னால் உள்ளே நுழைந்து அடாவடி செய்தாள், கேட்டதற்கு மானேஜரை அடித்தாள். இதை இவளுக்கு பேஸ்புக் கணக்கு இருந்ததினால் அதில் வெளியிட்டாள். இதை பார்த்த வெட்டி வேலை இல்லாத 2.25 லட்சம் பேர் இப்போ தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பர்?????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X