பொது செய்தி

தமிழ்நாடு

பூண்டியில் நீர் கசிவை தடுக்க சணல் பை, சவுக்கு: அரசை ஏமாற்றும் பொதுப்பணித் துறை

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: பூண்டி ஏரி மதகில், சணல் பை மற்றும் சவுக்கு கட்டையை பயன்படுத்தி, நீர் கசிவை தற்காலிகமாக சரிசெய்த பொதுப்பணித் துறையினர், அரசிற்கு தவறான அறிக்கை அனுப்பியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.23 டி.எம்.சி., ஆகும். ஆந்திராவின் கிருஷ்ணா நீர் வரத்து கைகொடுத்ததால், நீர்
பூண்டி ஏரி, நீர் கசிவு, அரசு, பொ.ப., துறை,சணல் பை, சவுக்கு

சென்னை: பூண்டி ஏரி மதகில், சணல் பை மற்றும் சவுக்கு கட்டையை பயன்படுத்தி, நீர் கசிவை தற்காலிகமாக சரிசெய்த பொதுப்பணித் துறையினர், அரசிற்கு தவறான அறிக்கை அனுப்பியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.23 டி.எம்.சி., ஆகும். ஆந்திராவின் கிருஷ்ணா நீர் வரத்து கைகொடுத்ததால், நீர் இருப்பு 2.52 டி.எம்.சி.,யாக அதிகரித்து உள்ளது.


16 மதகுகள்வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்னே, 30 ஆண்டுகளுக்கு பின், தற்போது ஏரியில் அதிகளவில் நீர்வரத்து உள்ளது. ஏரியில் இருந்து உபரி நீரை வெளியேற்ற, 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஏழு மதகுகள் பழுதடைந்துள்ளதால், அவற்றில் இருந்து ஆங்காங்கே தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக, பொதுப்பணித் துறையிடம் அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.


latest tamil news
அதற்கு, கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், 'பூண்டி ஏரியின் மதகுகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மதகுகளின் மேல்பகுதியில் உள்ள 'ரப்பர் சீல்' களில் ஏற்படும், அனுமதிக்கப்பட்ட சிறு கசிவுகள் கூட உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளது. மதகுகளில் நீர் கசிவுகள் இல்லாமல், முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்த பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா, 'பூண்டி ஏரி மதகில் நீர்கசிவு தொடர்பான செய்தி வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பே அது சரி செய்யப்பட்டுவிட்டது' என, நேற்று பேட்டி அளித்தார். ஆனால், பூண்டி ஏரி மதகுகளில் நீர் கசிவு தொடர்கிறது. மதகுகளின் மேல் பகுதியில் ரப்பர் சீல்கள் இல்லாததே இதற்கு காரணம்.


சீரமைப்பு பணிநீர் கசிவை தடுப்பதற்கு, மழைக்காலங்களில் பயன்படுத்தும் சணல் பைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி, தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், நீர்கசிவு தொடர்கிறது. ஏரியில் நீர்இருப்பு அதிகரிக்கும்போது, அவை தாக்குபிடிக்க வாய்ப்பில்லை. நேரடியாக கள ஆய்வுக்கு செல்லாமல், அரசுக்கு அறிக்கை கொடுப்பதை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழக்கமாக வைத்துள்ளது இதன் வாயிலாக நிரூபணம் ஆகியுள்ளது.

அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ், 4.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2016ம்ஆண்டு, பூண்டி ஏரியின் மதகுகள் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. தற்போதை செயல்பாடுகளால், அப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, மதகில் ஏற்பட்டுள்ள நீர்கசிவை சரி செய்வதுடன், இனி தொடர்ந்து ஏற்படாத வகையில், நிரந்தர தீர்வு காண வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SRIDHAAR.R - Trichy,இந்தியா
23-செப்-202115:11:10 IST Report Abuse
SRIDHAAR.R Old ADMK regime everything was manuplated.No maintenance in any river, lake but lot of money was looted as per your vision. Naadu uurrupidum
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
23-செப்-202114:01:54 IST Report Abuse
vpurushothaman நீர் வளத் துறை துரையார் என்ன செய்கிறார். டெல்லிக்கு மகன் வீட்டில் " கொர் '' ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-செப்-202113:27:53 IST Report Abuse
Ramesh Sargam பூண்டியில் நீர் கசிவை தடுக்க சணல் பை, சவுக்கு. இப்படி செய்ய எவ்வளவு கோடி, இந்த கேடி அரசு ஊழியர்கள் ஆட்டை போட்டார்கலோ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X