அரசியல் செய்தி

தமிழ்நாடு

"ஏராளமான குழப்பங்களும் விடுதல்களும் நிராகரிப்புகளும் அந்த அறிக்கையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றனவே... "

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
'நீட்' தேர்வு தொடர்பான நீதியரசர் ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை, 'நீட் தேர்வானது அரசு பள்ளி- ஏழை-, எளிய- கிராமப்புற மாணவர்கள் மருத்துவர் ஆவதைத் தடுக்கிறது' என்பதை புள்ளி விபரத்தோடு அம்பலப்படுத்தி, 'நீட் தேர்வை தடை செய்' எனும் ஒட்டுமொத்த தமிழகத்தின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளது.-தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி'ஏராளமான குழப்பங்களும், விடுதல்களும்,

'நீட்' தேர்வு தொடர்பான நீதியரசர் ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை, 'நீட் தேர்வானது அரசு பள்ளி- ஏழை-, எளிய- கிராமப்புற மாணவர்கள் மருத்துவர் ஆவதைத் தடுக்கிறது' என்பதை புள்ளி விபரத்தோடு அம்பலப்படுத்தி, 'நீட் தேர்வை தடை செய்' எனும் ஒட்டுமொத்த தமிழகத்தின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளது.
-தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி



latest tamil news





'ஏராளமான குழப்பங்களும், விடுதல்களும், நிராகரிப்புகளும் அந்த அறிக்கையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றனவே...' என, சொல்லத் துாண்டும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி அறிக்கை



'நீட்' தேர்வுக்காக ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதால், முந்தைய அ.தி.மு.க., அரசை, அடிமை அரசு என தி.மு.க.,வினர் சொல்லினர். தி.மு.க., அரசு பதவியேற்று மூன்று மாதங்கள் தான் ஆகின்றன; மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
-புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி


'தற்கொலைகளுக்கு ஆதரவாக பேசினால் அதன் எண்ணிக்கை உயரும் என்பதை தாமதமாக தமிழக அரசு உணர்ந்திருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை




பஞ்சாப் மாநில முதல்வராக ஒரு துப்புரவு பணியாளர் பொறுப்பேற்று இருப்பது அரசியல் களத்தில் நிகழும் பண்பு மாற்றம். குறிப்பாக, அரசியல் கட்சிகளின் அக நிலையில் உருவாகி வரும் நெகிழ்வுப் போக்கு. கட்சிகளின் அதிகார அடுக்குகளில் நீடிக்கும் ஜாதி ஆதிக்கத்தில் ஏற்பட்டு வரும் தளர்வு நிலையாகும்.
-விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்


latest tamil news





'உண்மையில் பாராட்டப்பட வேண்டிய முன்னேற்றம். நல்லவேளையாக பஞ்சாபில் மூளை சலவை கட்சிகள் இல்லை போலும்...' என, திருப்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை



நம் செயலால் சம்பவங்கள் உருவாகுவது இல்லை. சம்பவங்கள் தான் நம்மை உருவாக்குகின்றன. எனவே யாரையும் நம்பத் தேவையில்லை.
-தி.மு.க., செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்


'நீங்கள் என்ன சொன்னாலும், தி.மு.க., மேலிடம் உங்களை கண்டுகொள்ளவில்லை என்ற விரக்தி உங்கள் வார்த்தைகளில் தென்படுகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை



ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் போராடி படித்து மருத்துவராக கனவு காணும் மாணவர்களுக்கு 'நீட்' எவ்வளவு பெரிய அநீதி என்பதை ராஜன் கமிட்டி விவரிக்கிறது. அதனால் தான் நீட் எனும் அநீதியை எதிர்க்கிறோம்.
- தமிழக காங்., பெண் எம்.பி., ஜோதிமணி


latest tamil news





'அதனால் மட்டுமல்ல, மோடி அரசு அறிமுகம் செய்யும் எதுவாக இருந்தாலும் எதிர்ப்பீர்கள். அந்த அளவுக்கு தான் காங்கிரஸ் கட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கை

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
23-செப்-202117:10:12 IST Report Abuse
Suppan ராஜன் கமிட்டி அறிக்கை மறைத்த சில உண்மைகள். 1. நீட் பயிற்சி மையங்களை பற்றி குறை கூறியிருக்கிறது. ஆனால் 12 ம் வகுப்புக்கும் பல இடங்களில் பயிற்சி நிலையங்கள் உள்ளன "நாமக்கல் பயிற்சிப் பண்ணைகளைப்" பற்றி மறைத்ததேன்? இவை நீட்டுக்கு முன்னால் பணமுள்ள மாணவர்களுக்குத்தானே உதவி செய்தன? தற்பொழுதைய அரச பயிற்சி மையங்களை பற்றிக் குறிப்பிடப்படவில்லை. அவற்றால் எவ்வளவு மாணவர்கள் பயனடைந்தனர் என்று எழுதவில்லை. ஒவ்வொரு வருடமும் தமிழக மாணவர்களின் நீட் தேர்ச்சி சதவீதம் அதிகமாவதை பற்றிக் குறிப்பிடவில்லை. கிராமப்புறத்திலிருந்து வரும் எல்லா மருத்துவ மாணவர்களும் கிராமப்புறத்திலேயேவா வேலை செய்கிறார்கள்? பல மாநிலங்களில் கிராமப்புற மருத்துவ நிலையங்களில் கட்டாய சேவைத் திட்டம் உள்ளன. மேல் படிப்புக்குக் கட்டாய கிராமப்புற சேவை உண்டு. ஆக மொத்தம் இந்த ராஜன் கமிட்டி அறிக்கை வெறும் கண்துடைப்பு.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
23-செப்-202116:52:53 IST Report Abuse
Suppan முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அவர்கள் இந்த ராஜன் கமிட்டி அறிக்கையை விமரிசித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். ராஜன் கமிட்டி அறிக்கையில் உள்ள நகைப்புக்குரிய விஷயங்கள். 1. மத்திய அரசு மாநில அரசுக்கு கல்லூரிகளுக்காக தேர்வு வைக்கக் கூடாது இது எந்த சட்டத்தில் உள்ளது? 2. மத்திய அரசு பல்கலைக் கழகங்களை நிறுவக் கூடாது ஆஹா தமிழ்நாட்டில் 7 ம் இந்தியாவில் 54 மத்திய பல்கலைக் கழகங்கள் உள்ளன. அவற்றை மூடிவிடலாமா? 3. மாநில அரசு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை எடுத்துக் கொள்ளவேண்டும். மாநில அரசிடம் பணமுள்ளதா? காட்ச்சிக்காரர்கள் நடத்தும் 27 பல்கலைக் கழகங்களை எடுத்துக் கொள்ளமுடியுமா? 4.நீட் தேர்வுக்கு இன்னும் சில ஆண்டுகள் நடந்தால் தமிழ்நாட்டு ஆதார சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் கிடைக்க மாட்டார்கள்.இதற்கு ஆதாரம் என்ன? 5. நீட் தேர்வினால் உண்டான நன்மைகளைப் பற்றி எங்குமே குறிப்பிடப்படவில்லை.. இதற்கு ஆதாரமாக உள்ள தரவுகள் மறைக்கப் பட்டிருக்கின்றன.மொத்தத்தில் அரசு விரும்பும் மாதிரியான அறிக்கையை இந்த கமிட்டி தயார் செய்திருக்கின்றது.இதற்கு ஒரு கமிட்டி தேவையா?
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
23-செப்-202116:03:54 IST Report Abuse
BASKAR TETCHANA உறுப்பிடாத உதயநிதி அந்த நீதிபதி ராஜனுக்கு எவ்வளவு பிச்சை போட்டிர்கள். ஒரு மாணவன் இறப்புக்கு பத்து லட்சம் தூக்கி கொண்டு ஓடினாயே மீதம் இரண்டு பேருக்கு என்ன அல்வாவை கொடுத்தாயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X