சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை மரச்சாமான்கள்!

Added : செப் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், மரச்சொப்புகள் செய்யும் கடைசல் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சுமி: 25 ஆண்டுகளாக கணவரும், நானும் கடைசல் தொழில் செய்கிறோம். என் கணவர் கண்ணன் எட்டாம் வகுப்பும், நான் ஐந்தாம் வகுப்பும் படித்துள்ளேன். அம்பாசமுத்திரத்தை சுற்றி நிறைய குடும்பங்கள் கடைசல் தொழில் செய்கின்றனர். எங்களுக்குள் எந்தப் போட்டி, பொறாமை யும் கிடையாது. எப்படியாவது

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், மரச்சொப்புகள் செய்யும் கடைசல் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சுமி: 25 ஆண்டுகளாக கணவரும், நானும் கடைசல் தொழில் செய்கிறோம். என் கணவர் கண்ணன் எட்டாம் வகுப்பும், நான் ஐந்தாம் வகுப்பும் படித்துள்ளேன். அம்பாசமுத்திரத்தை சுற்றி நிறைய குடும்பங்கள் கடைசல் தொழில் செய்கின்றனர். எங்களுக்குள் எந்தப் போட்டி, பொறாமை யும் கிடையாது. எப்படியாவது எங்கள் தொழில் வெளியே தெரிந்தால் சந்தோஷம்னுதான் எல்லாரும் உழைக்கிறோம்.இன்று பெரும்பாலான குழந்தைங்களுக்கு மரச்சொப்புன்னா என்னன்னே தெரியாது. அதனால் மரச்சாமான்களுக்கு மவுசு குறைந்து போனது. வருமானமில்லாமல் இங்குள்ளவர்கள் எல்லாம் வேறு தொழிலைத் தேடிப் போய்விட்டனர்.

இப்போது 40 குடும்பங்கள் தான் இந்தத் தொழிலைச் செய்கிறோம்.ஆரம்ப காலத்துல கடம்பு, தேக்கு, ரோஸ் வுட் மரக்கட்டைகளில் தான் சொப்புகள் செய்வர். இப்போது, யூகலிப்டஸ் மரங்களில் தான் செய்கிறோம். அதுதான் எங்களுக்கு கட்டுபடி ஆகிறது.மரங்களை வாங்கி வந்து காய வைத்து, ஓரடி கட்டைகளாக வெட்டி வைத்துக் கொள்வோம். அப்புறம் மிஷின் உளியால் செதுக்குவோம்; வடிவம், அச்சு எதுவும் கிடையாது.

ஒரு பொருளோட உருவத்தை மனசுக்கு உள்ள நினைச்சுக்கிட்டு அப்படியே செதுக்க வேண்டியது தான். ரொம்ப கவனமாக இருக்கணும். இல்லையெனில், கையைப் பதம் பார்த்துவிடும்.ஒரு கிலோ யூகலிப்டஸ் மரம், 12 ரூபாய்னு வாங்குறோம். 1 கிலோ மரத்தில், 10 பம்பரங்கள் செய்யலாம். செய்து முடித்ததும், அரக்கில் இயற்கை சாயம் கலந்து மிஷின் மூலமாகவே பெயின்ட் அடிச்சுக் காய வைப்போம். அப்புறம் பளபளப்புக்காக, பதப்படுத்தப்பட்ட தாழம்பூ ஓலையை வைத்து தேய்த்து, 'பாலிஷ்' செய்து, பெட்டிகளில் அடுக்கிடுவோம்.ஒரு நாளைக்கு 200 பம்பரங்கள் வரை செய்யலாம்.

சொப்புகள் எனில் 20 ஓலைப் பெட்டிகள் வரை செய்ய முடியும். எங்களை நம்பி பனை ஓலைப் பெட்டிகள் செய்யும் குடும்பங்களும் இதே ஊரில் இருக்கின்றனர். பனையோலைப் பெட்டியில், திருவை, பன்னீர் சொம்பு, குடம், உரல், அம்மினு அந்தக் காலத்துல நாம் பயன்படுத்தின 32 வகையான பொருட்கள் இருக்கும். அதை, 95 ரூபாய்னு மொத்த வியாபாரிகளுக்கு நாங்கள் கொடுக்கிறோம்.உங்க குழந்தைகள் விளையாட மரச்சொப்புகளை வாங்கிக் கொடுங்கள். மரச்சாமான்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை. குழந்தைகள் விழுங்க வாய்ப்பில்லை. மரச்சொப்புகள் செய்வது வெறும் தொழில் மட்டும் இல்லை; அது நம் மண்ணின் அடையாளம்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendran Chinnasamy - Coimbatore,இந்தியா
23-செப்-202116:12:04 IST Report Abuse
Rajendran Chinnasamy தயவு செய்து உங்கள் மொபைல் நம்பர் தரவும்
Rate this:
Cancel
CBE CTZN - Coimbatore,இந்தியா
23-செப்-202115:56:04 IST Report Abuse
CBE CTZN இவர்களுடைய தொலைபேசி அல்லது தொடர்பு கொள்ளவேண்டிய தெளிவான முகவரியை கொடுத்திருக்கலாம் .. அது இவர்களின் பொருளாதரத்தை மேம்படுத்த உதவும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X