பொது செய்தி

தமிழ்நாடு

இதோ அடுத்த சவால்: கோவையில் உற்பத்தியாகும் பொருட்கள் விமானமின்றி ஏற்றுமதிக்கு காத்திருப்பு

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
கோவை : கோவையில் இருந்து அனுப்பப்படும் உற்பத்தி பொருட்கள் விமான நிலையங்கள், துறைமுகங்களில் தேக்கம் அடைவதால், 'ஆர்டர்' கைமாறும் அபாயம் ஏற்படுவதாக, தொழில் துறையினர் புலம்புகின்றனர்.கோவையில் இருந்து இன்ஜினியரிங், மோட்டார் பம்ப்செட், பவுண்டரி என பல்துறை சார்ந்த பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.இங்கிருந்து, துாத்துக்குடி, கொச்சி
கோவை, உற்பத்தி, பொருட்கள், விமானம், ஏற்றுமதி, காத்திருப்பு,

கோவை : கோவையில் இருந்து அனுப்பப்படும் உற்பத்தி பொருட்கள் விமான நிலையங்கள், துறைமுகங்களில் தேக்கம் அடைவதால், 'ஆர்டர்' கைமாறும் அபாயம் ஏற்படுவதாக, தொழில் துறையினர் புலம்புகின்றனர்.

கோவையில் இருந்து இன்ஜினியரிங், மோட்டார் பம்ப்செட், பவுண்டரி என பல்துறை சார்ந்த பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.இங்கிருந்து, துாத்துக்குடி, கொச்சி துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டு கப்பல்களிலும், சென்னை, கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து விமானங்களிலும், பொருட்கள் அனுப்பப்படுகின்றன. கொரோனா பாதிப்புக்கு பிறகு, தற்போது, சேவை மீண்டும் துவங்கினாலும், துறைமுகங்களில் கன்டெய்னர் தட்டுப்பாடு, குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம் போன்ற காரணங்களால், ஏற்றுமதி பொருட்கள் தேக்கம் அடைகின்றன.இதனால், ஏற்றுமதியில் பின்னடைவுடன், இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் ஆர்டர், வேறு நாடுகளுக்கு கைமாறுவதாகவும் தொழில் துறையினர் புலம்புகின்றனர்.

இந்திய வார்ப்பட சங்க கோவை கிளை தலைவர் பால்ராஜ் கூறியதாவது:கோவையில் இருந்து மோட்டார் பம்ப் செட், காஸ்டிங் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகின்றன. துறைமுகங்களில் கன்டெய்னர் தட்டுப்பாட்டால், பொருட்கள் அனுப்ப தாமதமாகிறது. கன்டெய்னர் உற்பத்திக்கு அரசு மானியம் வழங்கி, தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.கோவையில் இருந்து துபாய், ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாததால், மதுரை, சென்னை, கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு, பொருட்களை அனுப்பி அங்கிருந்து குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.


latest tamil news




தற்போது, விமானங்கள் குறைவாக இயக்கப்படுவதால் பொருட்கள் தேக்கம் அடைகின்றன. இதனால், நம்மிடம் பொருட்களை பெற்ற அமெரிக்கா, மெக்சிகோவிடம் பெறுகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு போலந்து, செக் குடியரசு நாடுகளில் இருந்தும், துருக்கியில் இருந்தும் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. சீனாவில் இருந்து ரயில்கள் வாயிலாக, ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்கள் செல்வது வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கான ஆர்டர், வேறு நாடுகளுக்கு மாறி வருவது தொடர்ந்தால், தொழில் துறை பெரும் சிரமத்தை சந்திக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.


பொருட்கள் தேக்கம் ஏற்படுவது எதனால்?



விமான நிலையங்களின் 'ஏர் கார்கோ கம்ப்ளெக்ஸ்'களில் பொருட்களை ஏற்றி, இறக்க ஆட்கள் தட்டுப்பாடு, கையாளுவதில் சிரமம் போன்ற காரணங்களால், பொருட்கள் தேக்கம் அதிகரிக்கிறது என்கின்றனர் தொழில் துறையினர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
23-செப்-202118:53:50 IST Report Abuse
M  Ramachandran உள்ள உறைபதியையே காசாக்க முடிய வில்லை . இதில் பெரிதாக உதார் விடுகிறார்.
Rate this:
Cancel
CBE CTZN - Coimbatore,இந்தியா
23-செப்-202115:43:30 IST Report Abuse
CBE CTZN ஒரு நாள் கூட இந்த பிரச்னையை பிஜேபி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் பேசவில்லை ... இவர்கள் செய்வது எல்லாம் எதிர்ப்பு அரசியலும் மோதி புராணமும்...
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
23-செப்-202115:09:25 IST Report Abuse
தமிழன் என்னடா இது made in tamilnadu வுக்கு வந்த சோதனை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X