பொது செய்தி

இந்தியா

2,479 காண்டாமிருகத்தின் கொம்புகள் தீ வைத்து எரிப்பு

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
போகாகட்: அசாமில், கடத்தலில் பிடிபட்ட காண்டாமிருகங்களின், 2,479 கொம்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கஜூரங்கா உயிரியல் பூங்கா, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு புகழ் பெற்றது. காண்டாமிருக கொம்பில் மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுவதால், அவற்றை கொன்று கொம்புகள் கடத்தப்படுகின்றன. இவ்வாறு
Assam, Rhino Horns, Burns, Creates History, World Rhino Day, அசாம், காண்டாமிருகம், கொம்புகள், எரிப்பு

போகாகட்: அசாமில், கடத்தலில் பிடிபட்ட காண்டாமிருகங்களின், 2,479 கொம்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கஜூரங்கா உயிரியல் பூங்கா, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு புகழ் பெற்றது. காண்டாமிருக கொம்பில் மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுவதால், அவற்றை கொன்று கொம்புகள் கடத்தப்படுகின்றன. இவ்வாறு கடத்தலில் பிடிபட்ட, உலகிலேயே மிக அதிகமான 2,479 காண்டாமிருக கொம்புகளை அசாம் பராமரித்து வந்தது.


latest tamil news


இந்நிலையில் நேற்று (செப்.,22), சர்வதேச காண்டாமிருக பாதுகாப்பு தினத்தையொட்டி, உரிய சடங்குகளுடன் அனைத்து காண்டாமிருக கொம்புகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியதாவது: காண்டாமிருக கொம்புக்கு மருத்துவ குணம் எதுவும் கிடையாது. இதை நிரூபிக்க, காண்டாமிருக கொம்புகள் உரிய சடங்குகளுடன் எரியூட்டப்பட்டன. இதை விற்பனை செய்திருந்தால் அரசுக்கு வருவாய் கிடைக்குமே என சிலர் கூறுகின்றனர்.


latest tamil news


பணம் கிடைக்கிறது என்பதற்காக, சிறுநீரகத்தை விற்பது சரியா என அவர்களை நான் கேட்கிறேன். இந்த அரசு ஆட்சியில் உள்ளவரை இனி இந்த மாநிலத்தில் காண்டாமிருகத்தை கொல்வது அவ்வளவு சுலபம் அல்ல என தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கையாக இறந்த 94 காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு, அருங்காட்சியகம் ஒன்று ஏற்படுத்தப்படும். உலகின் மிக உயரமான 42.5 செ.மீ., காண்டா மிருக கொம்பும் இங்கு காட்சிக்கு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
23-செப்-202110:50:37 IST Report Abuse
Sankare Eswar அடேய் முட்டா பய மவனே.... எரிக்கமா அத வித்து அந்த எஞ்சியிருக்கும் காண்டாமிருகங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வளர்ச்சி பணிகளை செய்து இருக்கலாமே.
Rate this:
தத்வமசி - சென்னை ,இந்தியா
23-செப்-202114:26:59 IST Report Abuse
தத்வமசி நீதாண்டா முட்டாள். மிருகங்களை கொன்று அதை கடத்தியவர்களிடம் இருந்து பிடித்ததை விற்கலாம் என்று கூறும் நீதான் முட்டாள். கடத்தல்காரர்களுக்கும் வேட்டைக்காரர்களுக்கும் ஆதரவாக பேசும் உனது போக்கை என்னவென்று கூறுவது ? ஹெராயின், ஒபியம் பிடிபட்டால், கள்ளச்சாராயம் பிடிபட்டால் அதை விற்று பணமாக்கலாம் அதானே உனது எண்ணம் ? எஞ்சி இருக்கும் காண்டாமிருகத்தை அவர் காப்பாற்றுவார். உன் வீணான கதறலை நிறுத்தவும்....
Rate this:
Indhiyan - Chennai,இந்தியா
23-செப்-202118:16:07 IST Report Abuse
Indhiyanதவறு சங்கர். 2500 கொம்புகளை விற்றால், அதை விற்க, வாங்க, மறுபடி விற்க, புரோக்கர் என்று கொம்பு மார்க்கெட் வளரும். அதில் பழகி இருப்போர் இருப்பது பத்தாது என்றால் புதிதாக கொல்வார்கள், கொடிய மனிதர்கள். பணத்துக்கு வழிகள் பல இருக்கும். கொம்புகளை மார்க்கெட்டில் விடாததே சரி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X