அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வின் தில்லுமுல்லுகளை முறியடிக்க வேண்டும்: பழனிசாமி

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
திருப்பத்தூர்: ''உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற வேண்டும்,'' என அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.திருப்பத்தூரில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.அப்போது பழனிசாமி
பழனிசாமி, இபிஎஸ், எடப்பாடிபழனிசாமி, எடப்பாடிகேபழனிசாமி, அதிமுக, அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தல்,  திருப்பத்தூர், திமுக, தி.மு.க.,

திருப்பத்தூர்: ''உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற வேண்டும்,'' என அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

திருப்பத்தூரில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.


திமுக தில்லுமுல்லை முறியடிக்க வேண்டும்

latest tamil news



அப்போது பழனிசாமி பேசியதாவது: உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும். தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும்.

நீட் தேர்வு விவகாரத்தில், மக்களிடம் பச்சைபொய்யை தி.மு.க., தெரிவித்தது. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு; தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என மக்களை தி.மு.க., ஏமாற்றி வருகிறது. அக்கட்சி அறிவித்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000, சிலிண்டர் மானியம் ரூ.100, முதியோர் ஓய்வூதியம் உயர்வு போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது?


latest tamil news


லோக்சபா தேர்தலின் போது தி.மு.க., கல்விக்கடன் மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை அளித்தது. சட்டசபை தேர்தலின் போதும் அதே வாக்குறுதியை அறிவித்தது. தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என அறிவித்து, அதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்ததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

ஓட்டுகளை பெறுவதற்காக பச்சைப் பொய்யை சொல்லி ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் தி.மு.க.,வினர் வாக்குறுதியை அளிப்பார்கள். ஆனால், நிறைவேற்ற மாட்டார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை சொல்லி நிர்வாகிகள் ஓட்டு சேகரிக்க வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Thanjavur,இந்தியா
23-செப்-202120:41:30 IST Report Abuse
Ram (E) edappadi (P) pannerselvan (s) Sasikala ... ethu eppadi irukku
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
23-செப்-202120:38:25 IST Report Abuse
Ram அப்புறம் நான் விளையாட்டா பேசுனதெல்லாம்ம் அப்படியே நம்பிட்டேங்க ஆவு
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் இவர் முந்தைய தேர்தல் வாக்குறுதிகளையெல்லாம் இன்னும் எனோ நிறைவேற்றவில்லை EPS எப்போ செய்வீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X