அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாட்டிலேயே வேகமாக செயல்படும் அரசு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (57)
Share
Advertisement
சென்னை: ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‛‛இந்தியாவிலேயே இதைவிட வேகமாக செயல்படும் ஆட்சி எந்த மாநிலத்திலும் இல்லை,'' எனக் கூறினார்.விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
DMK, Stalin, TamilnaduGovt, Tamilnadu, CM, தமிழகம், மின் இணைப்பு, விவசாயிகள், திட்டம், துவக்கம், முதல்வர், ஸ்டாலின், வேகமாக செயல்படும் அரசு, பெருமிதம்

சென்னை: ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‛‛இந்தியாவிலேயே இதைவிட வேகமாக செயல்படும் ஆட்சி எந்த மாநிலத்திலும் இல்லை,'' எனக் கூறினார்.

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மே 7ம் தேதி நான் பதவியேற்கவில்லை, பொறுப்பை ஏற்றேன் என்று தான் சொல்ல வேண்டும். பொறுப்பேற்ற நாளில் இருந்து நாள்தோறும் பல திட்டங்களை துவக்கி வைத்து வருகிறேன். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் மாதம் 25 ஆயிரம் வீதம் 4 மாதத்தில் திட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகளுக்கு மின் இணைப்பு திட்டம் மிகவும் மகத்தானது.


latest tamil news


தற்போது அமைச்சர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் துறையின் திட்டப்பணிகளை செய்து வருகின்றனர். 10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில் மொத்தம் 2 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே மின்இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இலவச மின்சாரம் திட்டத்துக்கு 4.5 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். முதற்கட்டமாக 4 மாதங்களிலேயே ஒரு லட்சம் பேருக்கு புதிய மின்இணைப்பு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதைவிட வேகமாக செயல்படும் ஆட்சி எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க., ஆட்சி, உழவர்களுக்கானது. வேளாண்மையில் புரட்சி செய்யும் ஆட்சி. முன்னாள் முதல்வர் கருணாநிதி, உழவர்களின் ரூ.7,000 கோடி கடனை தள்ளுபடி செய்தார்.


latest tamil news


தமிழக மின்சார வாரியம் செழிப்பாக இருக்கிறது என யாரும் நினைத்துவிட வேண்டாம். மின்சார வாரியத்தை அ.தி.மு.க., ஆட்சி சீரழித்துவிட்டது. மின் வாரியத்தை ரூ.1.59 லட்சம் கோடி கடனில் தள்ளிவிட்டுச் சென்றது முந்தைய அ.தி.மு.க., அரசு. மின்சார வாரியம் ரூ.1,900 கோடி வட்டி கட்டி வருகிறது. சூரிய சக்தி மின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும். திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

புதிய மின்இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள் மின்சாரத்தை சிக்கனமாக செலவிடவேண்டும். மின்சாரம் தயாரிப்பு என்பதே மிகப் பெரிய செலவு வைக்கும் திட்டம். முடிந்த அளவு சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துங்கள். இத்திட்டம் தலைமுறை, தலைமுறைக்கும் பயன்படும் திட்டம். மாநில மக்களுக்கு உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் திட்டம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
24-செப்-202100:05:42 IST Report Abuse
m.viswanathan கண்ணுக்கெட்டும் தூரம் , தூரம் , எந்த வேகத்தையும் காணோம் , காணோம் , தமிழக திராவிட கூட்டத்துக்கு கொண்டாட்டம் , தமிழனுக்கு திண்டாட்டந்தான்
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
23-செப்-202122:18:24 IST Report Abuse
adalarasan Enga neengale mudal/matra mandirikal,thangalairhane,thinamum,pukazhntha kolvadu satru ovraa theriyala? Porumaiya,,irungaedavadhu nijama,munnetram adainthal ,makkal pugazhvaarkal????4madhangal thana,aayirukku?innun kodutha vakkuruthikal,ilavasangale,mudinthapadilla?edirkatchiyin meethu,raid,kesukal aana, bahujoraa seyyaranga?adhai solreengapolirukku?
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
23-செப்-202119:41:15 IST Report Abuse
Poongavoor Raghupathy ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். ஸ்டாலினின் தந்தையர் கருணாநிதி தமிழ்நாட்டை வாங்கியவர் போலும் ஸ்டாலின் தற்சமய அரசன் போலவும் நினைத்து எலெக்ஷனுக்கு முன் வாக்குறுதிகளை மக்களுக்கு வாரி வழங்கி பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளித்ததை பார்க்கிறோமே. தனக்கு தானே பெருமை பேசினால் வோட்டு போட்ட நாற்பது விழுக்காடு மக்களிடம் கூட எடுபடாது என்று புரிந்துகொணடு முக்கியமான நல்ல காரிதாய் யங்கள் செய்தல் ஸ்டாலினுக்கு நல்லது.கோவில் வாசலில் பெரியார் ஆட்சி புரிவது பெரியார் மண் என்று சொல்லிக்கொண்டு கடவுளுக்கு அர்ச்சனைக்கு ஆட்கள் அனுப்புவது உலகில் யாரும் செய்யாத நாடகம். ஸ்டாலின் ஒன்று புரிந்துகொள்வது அவருக்கு மிகவும் முக்கியம். நல்லது செய்தால் தான் அவருக்கு நல்லது நடக்கும். நல்லது என்பது என்ன என்று ஸ்டாலினுக்கு தெரியாவிட்டால் அது செயல்கள் எல்லா மக்களுக்கும் பயன் தருவதுதான் நல்ல செயல்கள். பழைய விரோதத்தை விட்டு விட்டு எல்லா மக்களுக்கும் நல்லது செய்தால் தான் நல்ல ஆட்சி என்று கூற முடியும், சில சமயம் ஸ்டாலினுஜ்ஜு கேட்ட காலமோ என்று நினைக்க தோன்றுகிறது ஏனெனில் ஸ்டாலினின் செயல்கள் ஒரு பக்ஷமாக சட்ட விரோதமாக நன்கு தெரிகிறது. மோடியின் மேலே ஸ்டாலின் வெறுப்பை கொட்டி எதிர்க்கிறார் அல்லாது நாட்டின் நன்மைக்காக நினைப்பதாக தெரியவில்லை. குடியை நிறுத்த சொல்லிவிட்டு ஆட்சியில் குடிக்கடைகளை திறக்கிறார். பெட்ரோல் டீசலை கீ எஸ் தி க்குள் கொண்டுவர போராடி எப்போது அதையே எதிர்ப்பது என்ன செயலோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X