சரிவின் விளிம்பில் ஆப்கன் சுகாதாரத்துறை: உலக சுகாதார அமைப்பு கவலை| Dinamalar

சரிவின் விளிம்பில் ஆப்கன் சுகாதாரத்துறை: உலக சுகாதார அமைப்பு கவலை

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (6)
Share
காபூல்: ‛‛தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு அந்நாட்டின் சுகாதாரத்துறை சரிவின் விளிம்பில் உள்ளது,'' என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் கவலை தெரிவித்துள்ளார்.ஐ.நா., உறுப்பினர்கள், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள், அலுவலர்கள் அனைவரும் காபூல் சென்று தலிபான் பயங்கரவாத அமைப்பின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசித்தனர்.
Afghanistan, WHO, UN, ஆப்கன், சரிவின் விளிம்பு, சுகாதாரத்துறை, ஐநா, தலைவர், கவலை

காபூல்: ‛‛தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு அந்நாட்டின் சுகாதாரத்துறை சரிவின் விளிம்பில் உள்ளது,'' என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் கவலை தெரிவித்துள்ளார்.

ஐ.நா., உறுப்பினர்கள், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள், அலுவலர்கள் அனைவரும் காபூல் சென்று தலிபான் பயங்கரவாத அமைப்பின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசித்தனர். இந்த ஆலோசனைக்குப் பின் ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறைக்கு உடனடியாக 4.5 கோடி அமெரிக்க டாலர்கள் உதவி வழங்கப்படும் என ஐ.நா., மனிதநேய அலுவலர் மார்டின் கிரிபித் அறிவித்தார்.


latest tamil news


ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை நிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் கூறியதாவது: ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியபின் சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டன. இதன்பின், யார் உயிரைக் காப்பாற்றுவது? யார் உயிரைக் காப்பாற்றாமல் விடுவது? என்பதை அந்நாட்டு சுகாதாரத்துறை முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை சீர்குலையும் விளிம்பில் இருக்கிறது.

அவசரமான முடிவுகள் எடுக்காவிட்டால், உடனடியாக மனிதப் பேரழிவைச் சந்திக்கும். நாங்கள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றதன் மூலம் அங்குள்ள மக்களுக்கு உடனடித் தேவை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது, நிர்வாகத்தினரிடமும் பேசி, உடனடியாக சுகாதார வசதிகளை மேம்படுத்தத் தேவையானவற்றை அறியமுடிந்தது.

ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை தற்போதைய நிலையில் ஸ்தம்பித்துள்ளது. ஆப்கனில் இதுவரை 37 கொரோனா மருத்துவமனைகளில் 9 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு வழிமுறைகள் பெரும்பாலும் ஆப்கனில் கடைப்பிடிக்கப்படவில்லை. பரிசோதனை, தடுப்பூசி செலுத்துவது குறைந்துவிட்டது. தலிபான்கள் அமைத்துள்ள இடைக்கால அரசில் சுகாதாரப் பணிகளில் பெண்களை ஈடுபடுத்துவது அவசியம். ஆப்கனின் பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சுகாதாரத்துறையை மேம்படுத்தத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு உதவும். இவ்வாறு டெட்ராஸ் அதானம் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X