பொது செய்தி

தமிழ்நாடு

புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கை 'உலக ரோஜா தினம்' கொண்டாட்டம்

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை : அப்பல்லோ மருத்துவமனை சார்பில், புற்றுநோயாளிகளை ஊக்குவிக்கும் வகையில், 'உலக ரோஜா தினம்' கொண்டாடப்பட்டது.கனடா நாட்டை சேர்ந்த, 14 வயது சிறுமியான மெலிண்டா ரோஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும், தன்னைசுற்றி இருந்தவர்கள் மத்தியில், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தினார். அவரது நினைவாக, ஆண்டு தோறும், செப்., 22ம் தேதி, 'உலகரோஜா தினம்'
 புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கை 'உலக ரோஜா தினம்' கொண்டாட்டம்

சென்னை : அப்பல்லோ மருத்துவமனை சார்பில், புற்றுநோயாளிகளை ஊக்குவிக்கும் வகையில், 'உலக ரோஜா தினம்' கொண்டாடப்பட்டது.

கனடா நாட்டை சேர்ந்த, 14 வயது சிறுமியான மெலிண்டா ரோஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும், தன்னைசுற்றி இருந்தவர்கள் மத்தியில், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தினார். அவரது நினைவாக, ஆண்டு தோறும், செப்., 22ம் தேதி, 'உலகரோஜா தினம்' கொண்டாடப்படுகிறது.இத்தினத்தில், புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், சென்னை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையில், ரோஜா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் பங்கேற்று, புற்றுநோயாளிகளுக்கு ரோஜா பூ கொடுத்து மகிழ்வித்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் இயக்க செயல்பாடுகளுக்கான இயக்குனர் ஹர்ஷத் ரெட்டி கூறுகையில், ''எங்கள் நோயாளிகள், புற்றுநோயினை எதிர்த்து போராட கூடிய மன தைரியத்தை பெற்றிருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் அவர்களை உற்சாகமூட்டும் வகையில், இத்தினத்தை கொண்டாடி வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X