ராஜ்யசபா உறுப்பினர்களாக தி,மு.க., வேட்பாளர்கள் தேர்வு உறுதி| Dinamalar

ராஜ்யசபா உறுப்பினர்களாக தி,மு.க., வேட்பாளர்கள் தேர்வு உறுதி

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (15)
Share
சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர்கள் தேர்வு உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் மனுத்தாக்கல் செய்த பா.ஜ., உறுப்பினர் ஒருவர் தேர்வாகிறார்.அ.தி.மு.க., சார்பாக, ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக
ராஜ்யசபா, திமுக வேட்பாளர்கள், போட்டியின்றி தேர்வு, உறுப்பினர்கள், தமிழகம், திமுக, 2பேர் தேர்வு, புதுச்சேரி, பாஜ, ஒருவர் தேர்வு,

சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர்கள் தேர்வு உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் மனுத்தாக்கல் செய்த பா.ஜ., உறுப்பினர் ஒருவர் தேர்வாகிறார்.

அ.தி.மு.க., சார்பாக, ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், தங்களுடைய எம்.பி. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அவ்விரு இடங்களும் காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த 2 காலி இடங்களுக்கு அக்.4ம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இவ்விரு காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் 2022 ஜூன் மாதம் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் 2026 ஏப்ரல் மாதம் முடிவடையும்.


latest tamil news



இத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செப்.15ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் நேற்று 22ம் தேதி முடிவுற்றது. இரு ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு தி.மு.க., வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் ராஜேஸ்குமார் இருவரும் கடந்த 21ம் தேதி தலைமைச் செயலகத்தில், சட்டசபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். அப்போது, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேரு, எம்.பி.,க்கள் திருச்சி சிவா, கனிமொழி, என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இன்று .23ம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை நடந்தது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப். 27ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நாளான அக்.,4ம் தேதி மாலை 5 மணிக்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகும். இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் தி.மு.க வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தி.மு.க.,வுக்கு சட்டசபையில் போதிய பலம் இருப்பதால், இரு வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.


புதுச்சேரியில் பா.ஜ., தேர்வு



latest tamil news


புதுச்சேரியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 10 சட்டசபை உறுப்பினர்களும், பா.ஜ.க.வுக்கு நியமன எம்.எல்.ஏ.க்களை சேர்த்து 9 பேரும் உள்ளனர். இச்சூழலில் புதுவையில் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து அரசியல் கட்சிகள் சார்பில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., வேட்பாளராக பா.ஜ., பொருளாளராக உள்ள செல்வகணபதி அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றி தேர்வாகிறார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X