தமிழர்களுடன் பேச்சு: அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்புக்கு புலம்பெயர் தமிழர்கள் வரவேற்பு

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கொழும்பு: 'தமிழ் வம்சாவளியினருடன் பேச்சு நடத்த, அதிபர் கோத்தபய ராஜபக்சே விருப்பம் தெரிவித்திருப்பது முற்போக்கான நடவடிக்கை' என, உலகளாவிய தமிழ் மன்றம் தெரிவித்துள்ளது.'இலங்கையில் உள்நாட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண தமிழர்களுடன் பேச்சு நடத்த உள்ளோம். அதுமட்டுமின்றி, விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்ததற்காக கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு

கொழும்பு: 'தமிழ் வம்சாவளியினருடன் பேச்சு நடத்த, அதிபர் கோத்தபய ராஜபக்சே விருப்பம் தெரிவித்திருப்பது முற்போக்கான நடவடிக்கை' என, உலகளாவிய தமிழ் மன்றம் தெரிவித்துள்ளது.



latest tamil news



'இலங்கையில் உள்நாட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண தமிழர்களுடன் பேச்சு நடத்த உள்ளோம். அதுமட்டுமின்றி, விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்ததற்காக கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்க தயங்க மாட்டேன்' என, ஐ.நா., பொதுச் செயலரிடம் அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினார். அவரது இந்த முடிவினை இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் வரவேற்று உள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், உலகின் முக்கிய தமிழ் சிறுபான்மை புலம்பெயர் குழுவாக கருத்தப்படும் உலகளாவிய தமிழ் மன்றத்தின் (ஜி.டி.எப்.,) செய்தி தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் தனது டுவிட்டரில் பக்கத்தில், 'அதிபர் கோத்தபய ராஜபக்சே தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை ஆகும். நாங்கள் அதை வரவேற்கிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
23-செப்-202120:33:53 IST Report Abuse
M  Ramachandran இந்த கோத்தபய்யான் மற்றும் அவன் சகோதரன் நம்பிக்கை திரோகிகள் இருவருமெ தமிழகர் எடையில் ஏமாற்று பேர்வழிகள். பின்பக்கம் குத்துவதில் கில்லாடிகள். இவனை பேச்சய் நம்பி கெடாதீர்கள். மிக கவனம் தேவை. உங்களையும் சீனனுக்கு பணத்தய் வாஙகி கொண்டு அடிமையை சாசனம் எழுதி வைத்து விடுவான்.
Rate this:
Cancel
RB Max - Jaffna,இலங்கை
23-செப்-202120:00:40 IST Report Abuse
RB Max இலங்கை அரசியல் சட்டத்தை மாற்றாமல் எந்தவித சிறப்புரிமையும் தமிழர்களுக்கு கிடைக்காது... அதை மாற்றுவதற்க்கு சிங்களவரோ இஸ்லாமியரோ அனுமதிக்கப்போவதில்லை... பேச்சுவார்த்தை என்பது இரு பகுதிக்கும் ஒரு நாடகம்...
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
23-செப்-202119:03:52 IST Report Abuse
Nachiar புலம் பெயர் தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்த இயக்கங்களுக்கு எதிரானவர்கள். அதனால் புலம்பெயர் தமிழர்கள் என்று பொதுவாக அழைக்காமல் வேறு பெயரில் அழைக்கவும். புலம் பெயர் தமிழர்களில் பலர் கடின உழைப்பும் நேர்மையான வாழ்க்கையும் நடத்துபவர்கள். தமிழ் கூறி தமிழால் வாழ்பவர்கள் அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X