பொது செய்தி

தமிழ்நாடு

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது,'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட
தமிழகம், சென்னை வானிலை மையம், மழை, மேலடுக்கு சுழற்சி, கனமழை, புதுச்சேரி,

சென்னை: ‛‛வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது,'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப்.,23) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை(செப்.,24) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம்.

செப்.,25 தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம்.

செப்.,26 தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

செப்.,27 தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


latest tamil news




சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24ம் தேதி மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை



செப்.,23ல் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் ஆந்திர கடல் பகுதியில் வீசக்கூடும்.


செப்.,23,24 தேதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வீசக்கூடும்.



செப்.,26 மற்றும் 27 தேதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X