அரசியல் செய்தி

தமிழ்நாடு

தகுதியுள்ள அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
திண்டுக்கல்: ‛‛தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் பெற்றவர்களில் தகுதி உள்ள அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்,'' என, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரையில் பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதன்படி, ஒரு
நகைக்கடன், தள்ளுபடி, தகுதி, பெரியசாமி, அமைச்சர்

திண்டுக்கல்: ‛‛தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் பெற்றவர்களில் தகுதி உள்ள அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்,'' என, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரையில் பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதன்படி, ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் பெற்ற அனைத்து நகை கடன்களின் விவரம், கடன் கொடுத்த கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண் உள்பட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.

இந்நிலையில், நகை கடன் தொடர்பான ஆய்வில் கூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி நடந்தது அம்பலமாகி உள்ளது. ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகை கடன்களை பெற்றிருப்பதும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு சங்கங்களில் பல நகை கடன்களின் மூலம் லட்சக்கணக்கிலான ரூபாய் கடன் பெற்றிருந்ததும் என பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பான தொகையை திருப்பி வசூலிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


latest tamil news


இதுகுறித்து திண்டுக்கல்லில் அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகைக்கடனில் முறைகேடுகள், விதிமீறல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். தகுதியானவர்கள் அனைவருக்கும் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். அ.தி.மு.க., ஆட்சியில் குவாரி, தரிசு நிலங்களுக்கு கூட பயிர் கடன் தந்து மோசடி செய்துள்ளனர். ஓர் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் பயிர் கடன் தருவதற்கு பதில் ரூ.80 ஆயிரம் வரை தந்துள்ளனர். ஓரளவு இல்லாமல் விருப்பப்படி கடன் வழங்கி அ.தி.மு.க., ஆட்சியில் மோசடி செய்துள்ளனர். நகை இல்லாமலும் கடன் வழங்கப்பட்டுள்ளது. சங்கங்களில் நகை இல்லை. கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
24-செப்-202121:44:35 IST Report Abuse
madhavan rajan அரசு பதவி மற்றும் கல்வியில் முன்னுரிமை போன்றவை ஜாதி அடிப்படையில்தான் தருகிறீர்கள். அங்கு மட்டும் தகுதியானவர்களுக்குத்தான் என்று கூறுவதில்லையே. உயர் படிப்பு மற்றும் அரசு பணிகள் கெட்டுப்போகவேண்டும் என்ற எண்ணத்தால் அப்படி செய்கிறார்களா இவர்கள்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
24-செப்-202121:43:16 IST Report Abuse
madhavan rajan சொல்வதைத்தான் செய்வான் இந்த ஸ்டாலின் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறி ஓட்டுவாங்கி ஆட்சி அமைத்தவுடன் பேச்சை மாற்றிப் பேசுகிற அமைச்சரை வைத்து தன்னுடைய பித்தலாட்டத்தை நடத்துகிறார். இப்போது அமைச்சர் கூறியபடி தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி என்பதை எந்த ஒரு பிரச்சார மேடையிலாவது கூறியிருக்கிறாரா இந்நாள் முதல்வர்?
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
24-செப்-202102:48:11 IST Report Abuse
BASKAR TETCHANA இங்கேயும் பணம் விளையாட ஆரம்பித்து விட்டதா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X