அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Updated : செப் 24, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (60+ 39)
Share
Advertisement
வாஷிங்டன்: மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள்இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, 'குவாட்' அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு, அமெரிக்காவில் நாளை (செப்.,24) நடக்கிறது. இதில் பங்கேற்க, நேற்று (செப்.,22) டில்லியில்
அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

வாஷிங்டன்: மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள்

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, 'குவாட்' அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு, அமெரிக்காவில் நாளை (செப்.,24) நடக்கிறது. இதில் பங்கேற்க, நேற்று (செப்.,22) டில்லியில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, வாஷிங்டன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் மழை தூறியதால், பிரதமர் குடை பிடித்தபடி விமானத்திலிருந்து இறங்கினார்.


latest tamil newsஅமெரிக்க அரசு உயர் அதிகாரிகளான டி.எச்.பிரையன் மெக்கீன், அமெரிக்க நிர்வாகத்துறை இணை அமைச்சர் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட அதிகாரிகளும், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர். விமான நிலையத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்களும் பெருந்திரளாக கூடி, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைதொடர்ந்து காரில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு திரண்டிருந்த இந்தியர்களை கண்டவுடன் பாதுகாப்பு வளையத்தை மீறி வாகனத்திலிருந்து இறங்கிவந்து அவர்களிடம் கைகளை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


latest tamil newsகொட்டும் மழையில் கையில் தேசியக்கொடி ஏந்தி இந்தியர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். அமெரிக்காவில் 25ம் தேதி வரை தங்கியிருக்கும் பிரதமர் மோடி, முதல் நாளான இன்று, அடோப், குவால்காம் போன்ற 5 முன்னணி நிறுவனங்களில் சி.இ.ஓ.,க்களை சந்திக்க உள்ளார். இச்சந்திப்பு இந்திய நேரப்படி இரவு 11 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து பேசும் பிரதமர் மோடி, இரவு 12:30 மணியளவில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்திக்க உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (60+ 39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
23-செப்-202122:15:35 IST Report Abuse
R. Vidya Sagar முதல் படத்தை பார்த்தால் அமெரிக்காவில் இருந்து கொரோனா இறக்குமதி நிச்சயம் என்று தெரிகிறது. தலைவர் கூட்டத்தை பார்த்து விட்டால் ரொம்ப மகிழ்ந்து விடுவார்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-செப்-202112:18:14 IST Report Abuse
Visu Iyerஇன்னுமா தலைவர் என்று சொல்றீங்க......
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
23-செப்-202120:32:17 IST Report Abuse
Visu Iyer மாஸ்க் போடவில்லை.. சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை.. சரி.. (வழக்கம் போல) ஊருக்கு தான் உபதேசம் போல..
Rate this:
Desi - Chennai,இந்தியா
23-செப்-202121:24:03 IST Report Abuse
Desiமர்ம மனிதரே, மாஸ் தலைவருக்கு எதுக்கு மாஸ்க்?...
Rate this:
ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
23-செப்-202122:00:14 IST Report Abuse
ஏகன் ஆதன் தடுப்பூசி வந்து ரொம்ப நாளாச்சுங்க...
Rate this:
srini - ,
23-செப்-202122:03:42 IST Report Abuse
sriniidiot , mask is not mandatory in USA, also they are all vaccinated and checked before allowing them to see our PM, if you dont know the protocol you better be keep quiet, dont comments like an idiot, oh you are from Douglas party man...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-செப்-202112:26:32 IST Report Abuse
Visu Iyer"நீரளவே ஆகுமாம் நீராம்பல்" என்பது தமிழ் வேதம்...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-செப்-202112:28:35 IST Report Abuse
Visu Iyerதடுப்பூசி இந்தியாவில் கட்டாயமில்லை தானே... இந்தியாவில் மாஸ்க் கட்டாயம் இல்லை தானே (RTA வில் கேட்டு பாருங்க)...
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
23-செப்-202120:24:06 IST Report Abuse
Duruvesan இதெல்லாம் சும்மா ஜூஜூபி, யேசப்பாவின் சீடர் தியாகி ஸ்டாலின் சென்றால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் அதிபர்கள் ஓடி வந்து வணக்கம் சொல்வாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X