'பெகாசஸ்' வழக்கு: வல்லுநர் குழு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: மேற்காசிய நாடான இஸ்ரேலின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், வல்லுநர் குழு அமைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்து உள்ளார்.அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என, 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள் பெகாசஸ் மென்பொருள் வாயிலாக ஒட்டு
பெகாசஸ், உச்சநீதிமன்றம், வல்லுநர்குழு, சுப்ரீம் கோர்ட்,

புதுடில்லி: மேற்காசிய நாடான இஸ்ரேலின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், வல்லுநர் குழு அமைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்து உள்ளார்.

அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என, 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள் பெகாசஸ் மென்பொருள் வாயிலாக ஒட்டு கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மறைப்பதற்கு எதுவும் இல்லை. போன் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக நிபுணர்கள் குழுவை அமைத்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்.இந்த வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு விரும்பவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.


latest tamil news




இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியதாவது: பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு வல்லுநர் குழுவை அமைக்க உள்ளது. இது குறித்து அடுத்த வாரம் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இந்த வாரத்திலேயே உத்தரவு பிறப்பிக்க விரும்பினோம். ஆனால், குழுவில் இடம்பெற நாங்கள் பரிந்துரை செய்ய நினைத்த சிலர், தனிப்பட்ட காரணங்களுக்காக மறுத்தனர். இதனால், தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
23-செப்-202122:12:51 IST Report Abuse
R. Vidya Sagar விவசாயிகள் போராட்டத்தில் நீதி மன்றம் நியமித்த குழு அறிக்கை சமர்ப்பித்து ஒரு மாமாங்கம் ஆகியும் நீதி மன்றம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. ஆக்ஸிஜன் விஷயத்தில் அமைத்த task force இன்னும் அறிக்கை கொடுக்க வில்லை. (ஒரு வாரத்திற்குள் கொடுக்க உத்தரவு) நீதி மன்றம் தனது திறமையை மேம்படுத்தினால்தான் மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும்.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
23-செப்-202120:45:49 IST Report Abuse
r ravichandran உளவு என்பது ஒரு நாட்டிற்கு அவசியம் தேவை என்று சானக்கியரின் அர்த்த சாஸ்திரம் சொல்கிறது. அதுவும் நம்மை சுற்றிலும் தீவிரவாதிகள் நாடும், எல்லை தாண்டும் நாடும் இருக்கும்போது அவசியம் உளவு அவசியம். சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் என்ற போர்வையில் அந்நிய சக்திகளுக்கு உதுவுபவர்கள் இருக்கும் நிலையில் உளவு அவசியம். தவறு செய்யாதவர்கள் அஞ்ச வேண்டியது இல்லை. IB , RAW, CBI என்ற உளவு அமைப்புகள் இருந்தும் தீவிரவாத செயல்கள் நடந்தன. அமெரிக்காவில் நாசா, FBI, CIA என்ற உளவு அமைப்புகளின் செலவுகள், வழி முறைகள் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் , எதிர் கட்சிகள் , மற்ற எந்த அமைப்புகளும் கேள்வி கேட்க மாட்டார்கள். அங்கு நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நமது சுப்ரீம் கோர்ட் கூட சிறப்பு குழுவின் அறிக்கையை வெளியிட கூடாது நாட்டின் நலன் கருதி.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
23-செப்-202120:40:05 IST Report Abuse
jayvee ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் தன்னிச்சையான இந்த முடிவை முடக்கவேண்டும்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-செப்-202123:40:35 IST Report Abuse
தமிழவேல் எதுக்கு பயப்படுறீங்க ஜீஜி ,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X