பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்று தமிழக தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருப்பத்தூா் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற
Local Body Elections, Nomination, Tamilnadu, தமிழகம், உள்ளாட்சி தேர்தல், வேட்புமனு தாக்கல், மொத்தம், 97,831மனுக்கள்

சென்னை: ‛‛ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்று தமிழக தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருப்பத்தூா் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

அதேபோன்று, ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான தோ்தல் அக்டோபா் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக செப்டம்பர் 15 முதல் நேற்று வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.


latest tamil news



வேட்புமனு தாக்கல் குறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்புமனுக்கள் விவரம்: கிராம ஊராட்சித் தலைவர் - 15,967, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - 72,071, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 1,122, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - 8,671. மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வேட்புமனுக்கள் குறித்த பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X