சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாசு கட்டுப்பாட்டு வாரிய சேர்மன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் ஆத்துார் அருகே மாசு கட்டுப்பாட்டு வாரிய சேர்மன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தேரடி வீதியில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சேர்மன் வெங்கடாஜலம் என்பவரது, சொந்த வீடு உள்ளது. இன்று, லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர்
மாசு கட்டுப்பாட்டு வாரிய சேர்மன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு

ஆத்தூர்: சேலம் ஆத்துார் அருகே மாசு கட்டுப்பாட்டு வாரிய சேர்மன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தேரடி வீதியில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சேர்மன் வெங்கடாஜலம் என்பவரது, சொந்த வீடு உள்ளது. இன்று, லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் நரேந்திரன் தலைமையில் நான்கு போலீசார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் வெங்கடாசலம் குடியிருந்து வருவதால் மேற்படி வீட்டில் தற்போது யாரும் இல்லை. அவரது அண்ணன் மகன் பாலாஜி என்பவர் மூலம் வீட்டை திறக்கச் சொல்லி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னையில் வெங்கடாசலம் குடியிருந்து வருவதால் மேற்படி வீட்டில் தற்போது யாரும் இல்லை. அவரது அண்ணன் மகன் பாலாஜி என்பவர் மூலம் வீட்டை திறக்கச் சொல்லி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வனத்துறை அதிகாரியாக இருந்தவர் வெங்கடாஜலம். கடந்த, 2018ல் பணி ஓய்வு பெற்றார். 2019ல், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி பெற்றார். தற்போதும் அவர் இதே பதவியில் உள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருந்ததாகவும் அதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வந்ததாகவும் புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது சொந்த ஊர் மற்றும் அவர் குடியிருக்கும் சென்னை வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X