பொது செய்தி

இந்தியா

18 வயதுக்கு மேற்பட்டோரில் 66% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டனர்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் 66 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரம் பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டதில் பெரும்பாலானோர் மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கடந்த வாரம் தொற்று

புதுடில்லி: இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் 66 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



latest tamil news


இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரம் பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டதில் பெரும்பாலானோர் மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கடந்த வாரம் தொற்று உறுதியான 62.73 சதவீதம் பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.தொடர்ந்து 12வது வாரமாக, வாரந்தோறும் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் 3 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. குணமடைபவர்களின் விகிதம் 97.8 சதவீதமாக உள்ளது.


latest tamil news


இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 66 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டு உள்ளது. அதில், 23 சதவீதம் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனை படைக்கப்படுவதற்கு, சில மாநிலங்கள் செய்த சிறப்பான பணிகளே காரணம்.


latest tamil news



தாத்ரா நாகர் ஹவேலி, கேரளா, லடாக் மற்றும் உத்தர்கண்டில் 90 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஹிமாச்சல், அந்தமான், கோவா, சண்டிகரில் 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
23-செப்-202120:25:52 IST Report Abuse
Duruvesan செங்கல்பட்டில் வூசி தயாரிச்சி இந்தியா மற்றும் உலகுக்கே விடியல் தந்த யேசப்பாவின் சீடர் ஸ்டாலின் வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X