பொது செய்தி

தமிழ்நாடு

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு: ஸ்டாலின்

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஏற்றுமதியை ஊக்குவிக்க, ‛‛மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று(செப்.22) நடந்த 'ஏற்றுமதியில் ஏற்றம்; முன்னணியில் தமிழ்நாடு' என்ற மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.அதன்படி
மாநில, ஏற்றுமதி, மேம்பாட்டுக்குழு, அமைப்பு, முதல்வர் ஸ்டாலின், அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஏற்றுமதியை ஊக்குவிக்க, ‛‛மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று(செப்.22) நடந்த 'ஏற்றுமதியில் ஏற்றம்; முன்னணியில் தமிழ்நாடு' என்ற மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.


latest tamil news


அதன்படி தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நிதித்துறை, வேளாண் துறை, கால்நடைத்துறை, தொழில்துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள்.

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி தலைவருக்கு அறிக்கை அளிக்கும். மேலும், குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
24-செப்-202103:42:13 IST Report Abuse
Sankar Ramu இன்னும் இந்த பெயர்சூட்டு விழா முடியிலையா?
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
24-செப்-202100:22:33 IST Report Abuse
Aarkay டாஸ்மாக் சரக்கு வேண்டுமானால் ஏற்றுமதி செய்யலாம். எதெற்கெடுத்தாலும் கொடிபிடிக்கும் ஆமைகள் நிறைந்த நாட்டில், உற்பத்தியாவது, ஏற்றுமதியாவது ஒரே தமாசு
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
24-செப்-202100:03:59 IST Report Abuse
J. G. Muthuraj நல்ல வேளை அமைச்சர்கள் யாரும் இக்குழுவில் இடம் பெறவில்லை.....தலைமை செயலருக்கு இப்படிப்பட்ட பொறுப்பு கொடுத்திருப்பது நல்லதுதான்.....குறுகிய காலத்தில் அரசின் நம்பிக்கையை சம்பாதித்திருக்கிறார் என்று தெரிகிறது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X