காப்பி அடிக்க கடினமான படம்: பிரதமரை சீண்டும் காங்கிரஸ்!| Dinamalar

'காப்பி அடிக்க கடினமான படம்': பிரதமரை சீண்டும் காங்கிரஸ்!

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (61)
Share
புதுடில்லி: குவாட் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள மோடி, விமான பயணத்திலும் கோப்புகளை பார்க்கும் ஒரு படத்தை வெளியிட்டார். அது பாராட்டையும், விமர்சனத்தையும் பெற்றது.இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் ஏர் இந்தியா விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த படத்தை பதிவிட்டு, 'காப்பியடிக்க கடினமான படம்' என
Pmmodi, narendramodi, congress, பிரதமர்மோடி, காங்கிரஸ்,

புதுடில்லி: குவாட் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள மோடி, விமான பயணத்திலும் கோப்புகளை பார்க்கும் ஒரு படத்தை வெளியிட்டார். அது பாராட்டையும், விமர்சனத்தையும் பெற்றது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் ஏர் இந்தியா விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த படத்தை பதிவிட்டு, 'காப்பியடிக்க கடினமான படம்' என கூறியுள்ளது.


latest tamil newsநேற்று (செப்.,22) டில்லியில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, வாஷிங்டன் சென்றடைந்தார். விமானப் பயணம் சுமார் 15 மணி நேரம் ஆகும். அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சில கோப்புகளை கையோடு எடுத்துச் சென்று அவற்றை பார்த்தார். அந்த புகைப்படத்தை தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து, “நீண்ட விமானப் பயணம் என்பது சில கோப்புகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளையும் குறிக்கிறது,” என குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news


இப்படம் வெளியான சில மணி நேரங்களில் 13 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. “இத்தகைய பிரதமரை நாடு பெற்றிருப்பது மகிழ்ச்சி” என்கிற ரீதியில் சிலரும், “பிரதமரைப் போல் புகைப்படக்கலைஞரும் விமானத்தில் வேலை பார்க்கிறார்,” என சிலரும் விமர்சித்து மீம்கள், கருத்துக்கள் பதிவிட்டிருந்தனர்.


latest tamil news
பிரதமரின் புகைப்படம் வைரலானதை கண்ட காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலடி தரும் வகையில் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விமானப் பயண செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய படங்களை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏர் இந்தியா ஒன் விமானத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.


சிலர் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் விமானத்தில் கோப்புகளை கையாளும் படங்களை பகிர்ந்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரனும் காங்., கட்சி நிர்வாகியுமான விபாகர் சாஸ்திரி, தனது தாத்தா விமானத்தில் கோப்புகளை பார்த்த படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X